சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்திருக்கும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தொடக்கப் பள்ளி கட்டப்பட்டு இருக்கிறது. அதனின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றி 3 மாதங்களுக்குள் காலி செய்யுமாறு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சிவில் நீதிபதி ஜே.சந்திரன் கூறியதாவது, "கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட பள்ளியின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தின் கட்டுமானங்களை அகற்றிவிட்டு, அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது", என்று கூறுகிறார்.
இந்த வழக்கு 2005 ஆம் ஆண்டி தாக்கல் செய்யப்பட்டது. கட்டாயத் தடை உத்தரவின் நிவாரணத்திற்காக முதலில் தாக்கல் செய்யப்பட்டதால், அது வரம்புக்குட்பட்ட காலத்திற்குள் இருந்ததாகவும், இவை பள்ளியின் தரப்பில் கடுமையான மீறல்கள் என்றும் நீதிமன்றம் கூறியது.
வில்லிவாக்கத்தில் உள்ள அருள்மிகு சௌமிய தாமோதர பெருமாள் கோயில் நிலத்தில் ஸ்ரீ கனக துர்கா தொடக்கப் பள்ளி அமைந்துள்ளதை பற்றி, 2005 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
பள்ளியின் மேற்கட்டுமானம் 1949 இல் கட்டப்பட்டு, மாதம் ₹1905 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. பள்ளியின் முக்கிய நோக்கம் மொழிவழி சிறுபான்மையினரான தெலுங்கு பேசும் மக்களுக்கு கல்வி வழங்குவதாகும்.
நவம்பர் 1, 2001 முதல் அக்டோபர் 2004 வரை, 36 மாதங்களுக்கு பள்ளி நிர்வாகம் வாடகை செலுத்தவில்லை, ஏனெனில் ₹68,580 நிலுவைத் தொகை மற்றும் வாடகை உரிமை 2004 இல் காலாவதியானது. ஆனால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பிறகும் அவர்கள் நிலத்தை காலி செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.