கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரத்தின்படி, சென்னை மாநகராட்சியில் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் - கடந்த 14 நாட்களில் 47 நாட்கள் என இருந்த நிலை மாறி, ஆகஸ்ட் 3 அன்று 63 நாட்கள் என உயர்ந்திருக்கிறது. மரண விகிதம் 2. 11 சதவீதமாக உள்ளது. ஜூலை 17 அன்று சென்னையின் இறப்பு விகிதம் 1.63% என்ற அளவில் உள்ளது.
Advertisment
சென்னையில் கொரோனா பாதிப்பு குறையும் விதமாக, ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களின் நோய்த்தொற்று இரட்டிப்பாகும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சமீபத்திய தகவலின் படி, ராயபுரம், தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு மண்டலங்களிலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தலா 7% பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 8865 ஆக உள்ளது. 91% பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், 244 பேர் (2.50 %) இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Advertisment
Advertisements
அம்பத்தூர் மண்டலத்தில் இரட்டிப்பாகும் காலம் தற்போது 36 நாட்களாக உள்ளன. சென்னையில், கொரோனா ஆக்டிவ் நோயாளிகளின் சதவீதம் அம்பத்தூர் மண்டலத்தில் அதிகம் காணப்படுகிறது. அதாவது, நோய்த் தொற்று ( 4,836) ஏற்பட்டவர்களில், 22% பேர் (1, 401) இன்னும் நோய்த் தொற்றில் இருந்து குணமடையவில்லை.
அம்பத்தூருக்கு அடுத்தப்படியாக சென்னை கோடம்பாக்கம் ( 1357) மண்டலத்தில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இருப்பினும், கோடம்பாக்கம் மண்டலத்தில் குணமடைவோர் விகிதம் 87 சதவீதமாக அதிகரித்து காணப்படுகிறது. அம்பத்தூரில் குணமடைவோர் விகிதம் வெறும் 77 சதவீதமாக உள்ளன.
கோடம்பாக்கத்தின் இறப்பு விகிதம், 1.91 சதவீதமாக உள்ள நிலையில், அம்பத்தூர் மணடலத்தின் இறப்பு விகிதம் 1.56 விகிதமாக உள்ளது.
சென்னையில், தற்போது அம்பத்தூர் மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் அதிகரித்து காணப்படுகிறது.
அம்பாத்தூரில் ஏன் இந்த நிலை?
சென்னையில், அம்பத்தூர் மண்டலத்தில் ஆகஸ்ட் 4ம் தேதிவரை 1619 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. இதில், 10,4448 பேர் கலந்து கொண்டனர். இந்த காய்ச்சல் முகாம் மூலம், இதுநாள் வரை 1, 866 பேர் மட்டுமே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் முகாம்களில், அம்பத்தூர் மண்டலத்தில் SARI/ILI போன்ற தீவிர மூச்சுக் கோளாறு உள்ள நோயாளிகளின் வருகை 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
எனவே, சென்னையின் முக்கிய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிவரும் அம்பத்தூர் மண்டலத்தில், பொது மக்கள் தாமாக முன்வந்து கொரோனா மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil