தற்போது 1.3 சதவீதமாக உள்ள கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மே மாத நடுவில் தினசரி கொரோனா பாதிப்பு 19,000 ஆக அதிகரிக்கும் என ஐசிஎம்ஆரின் கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் 1.3 பேருக்கு தொற்று பரப்ப வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் தொற்றுநோயியல் நிபுணர் எஸ்.மணிகண்ட நேசன் கணிப்புகள்படி, மே 15 க்குள் சென்னையில் தினமும் 19,141 கோவிட் -19 பாதிப்பு பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
மே 5ஆம் தேதி தினசரி கொரோனா பாதிப்புகள் 9,652 ஆகவும், ஏப்ரல் 25 க்குள் 4,860 ஆகவும் இருக்கும் எனவும். சுகாதாரத்துறைக்கு இதனை சமாளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். இது தற்போதைய ஆர்டி ஐ அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியால் இந்த கொரோனா பரவலை குறைக்க முடியும் என நம்புவதாக கூறினார்.
வெள்ளிக்கிழமை சென்னையில் 3, 842 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்தனர். இதுவரை நகரில் 31,170 பேர் சிகிச்சையில் உள்ளனர். அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வீட்டு தனிமையில் இருக்கும் நபர்களை மாநகராட்சி தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் வீடு வீடாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் மேலும் கூறுகையில், மக்கள் பீதியடைய தேவையில்லை, ஆனால் வந்து சோதனை செய்ய வேண்டும். நேர்மறையாக இருந்தால், அவை நோயின் தீவிரத்தின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். அத்தகையவர்களுக்கு 12 திரையிடல் மையங்களும் இந்த நிறுவனத்தில் உள்ளன.பொதுமக்கள் ஸஅனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் . ஒருவேளை பாசிட்டிவ் ஆனால் நோயின் தீவிரத்தை பொறுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவர்களுக்காக மாநகராட்சி சார்பில் 12 ஸ்கீரினிங் மையங்கள் உள்ளன.
வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 78 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பாதிப்பு 10,51,487 ஆகவும் மொத்த உயிரிழப்பு 13,395 ஆகவும் உயர்ந்துள்ளது. சோதனையில் பாசிட்டிவ் விகிதம் 11 சதவீதமாக உள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை 44 சதவீத வழக்குகள் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவை. செங்கல்பட்டு 985 பேருக்கும், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் முறையே 395 மற்றும் 807 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"