Chennai covid19 second wave hospitals make kin care for patients : தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளுக்கு அருகே அவர்களின் உறவினர்கள் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்திப்படி, ராஜீவ் காந்தி மருத்துவமனை டவர் மூன்றில் தன்னுடைய 51 வயதுமிக்கவருக்கு அருகே அவருடைய மனைவி 12 மணி நேரம் தங்கவைக்கப்பட்டுள்ளார். கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மையங்களில் யாருக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்ற நிலையில் மருத்துவர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் அருகே அவரின் உறவினர்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். சிலர் முகக்கவசங்கள் இல்லாமல், பாதுகாப்பு ஆடை ஏதும் இல்லாமல் அப்படியே அமர்ந்துள்ளனர். எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் திங்கள்கிழமை அன்று அந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார்.
மருத்துவமனை நிர்வாகம் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத காரணத்தால் அவர்களின் உறவினர்கள் நோயாளிகள் அருகே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது. ஆனால் சுகாதாரத்துறை, இப்படி தங்கும் நபர்களால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை செய்துள்ளனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்மணி சிகிச்சை எடுத்துக் கொள்ள அவருடன் அவர் மகள் தங்கியிருந்தார். தினமும் உணவகங்களுக்கு சென்று உணவு வாங்குதல், பழைய துணிகளை வீட்டுக்கு எடுத்து சென்று, புதிய துணிகளை கொண்டு வருவதற்காக பேருந்தில் செல்லுதல் போன்றவற்றை மேற்கொண்டுள்ளார். அவருடைய அம்மா டிஸ்சார்ஜ் ஆன பிறகு வீட்டில் உள்ள அனைவருக்கும் நோய் தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க : இந்தியாவில் சில வாரங்களுக்கு ஊரடங்கு போடுங்கள் - பைடன் நிர்வாகத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர்
இப்படியான நபர்கள் அதிகப்படியான தொற்றை உருவாக்குகின்றனர். அவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் தொற்றின் அபாயம் அதிகரித்துள்ளது. ஒரு நபரால் சென்னையில் 1.2 நபருக்கு கொரோனா தொற்றை ஏற்படுத்த முடியும். இதன் அர்த்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும் கொரோனா தொற்றுக்கு ஆட்படுத்த முடியும்.
அரசு படுக்கை வசதிகளை அதிகரித்தாலூம் போதுமான மருத்துவர்கள் இல்லை என்று கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மூத்த மருத்துவர் கூறியுள்ளார். பொது வார்டில் 15 நோயாளிக்கு ஒரு செவிலியர் இருக்கின்ற நிலையில் ஐ.சி.யூவில் 4 பேருக்கு ஒருவரும், ஆக்ஸிஜன் பெட்டில் 8 பேருக்கு ஒருவரும் பணியாற்றுவார்கள். ஆனால் இம்முறை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் நோயாளிகளின் உறவினர்களை அனுமதித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil