Chennai Covid19 second wave : சென்னை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து படுக்கை வசதிகளையும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு வருகிறது. மற்ற அவசர தேவையற்ற அனுமதி மற்றும் அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மற்றொரு பக்கம், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள 50% படுக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன. சில மருத்துவமனைகளில் 90% படுக்கைகள் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது.
https://stopcorona.tn.gov.in பதிவு செய்யப்பட்ட 22 தனியார் மருத்துவமனைகளில் உள்ள 4534 படுக்கைகளில் 2356 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் கோவை போன்ற தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவமனைகளில் மக்கள் சேரும் எண்ணிக்கை ஒரே அளவாக இல்லை. முக்கிய மருத்துவமனைகளில் 90%க்கும் மேல் படுக்கைகளில் நோயாளிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் மற்ற மருத்துவமனைகளில் 40% படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளன.
மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் பைப் லைன்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் இருக்கின்றனர். ஆனால் விளையாட்டு அரங்கம் மற்றும் வர்த்தக தளங்களில் போதுமான படுக்கைகளை வரும் நாட்களின் தேவைகளுக்காக வைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தை சாமி தெரிவித்தார். அனைத்து வசதிகளையும் கொண்ட மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை துரிதப்படுத்தப்பட வேண்டும். மற்ற மருத்துவமனைகளில் இரண்டாம் கட்ட சிகிச்சைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். நிறைய மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்காக அல்லாத மற்ற வார்டுகளில் நோயாளிகள் அதிக அளவில் இல்லை. அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் இதர தேவைகளுக்காக மருத்துவமனை அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்ட போது மற்ற மருத்துவமனைகளும் அறிவித்தால் என்ன என்று அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சட்டக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் விடுதிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு பதிலாக தனியார் மருத்துவக்கல்லூரி விடுதிகளை அரசு கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும். அப்போது தான் மருத்துவர் குழு அருகிலேயே இருக்கின்ற சூழலும், நோயாளிகளுக்கு நம்பிக்கையும் வரும் என்று மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கூறினார். இதர பகுதிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் அவசர தேவைக்காக எவ்வாறு மருத்துவமனைக்கு செல்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அவர்கள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படலாம். நிறைய விடுதிகள் தற்போது காலியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். தற்போது இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆலோசனையை ஏற்று செயல்பட்டு வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil