பாஜக ஐடி பிரிவு தங்களது சமூக வலைதள கணக்கில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பெயரில் வெளியிட்ட பொய்யான பதிவு ஒன்றை ஷேர் செய்ததாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் நிர்மல் குமார் மீது 3 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இவ்வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை வேப்பரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென அவருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஆஜராக தவறும்பட்சத்தில் கைது நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என எச்சரித்துள்ளனர். பாஜக ஐடி பிரிவு தலைவர் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது, தமிழக பாஜக கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil