scorecardresearch

பிளஸ் 1 மாணவிகள் 2 பேர்… 5 இளைஞர்கள்… வட சென்னை கெஸ்ட் அவுஸ்… ஐயோ, கொடுமை!

A Juvenile, 4 others held for raping two girls in guest house in north Chennai Tamil News: சென்னையில் 11ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

Chennai crime news in tamil: five including boy held for raping two girls in guest house north Chennai

Chennai crime news in tamil: சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் அடிக்கடி தங்களது வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த இரு மாணவிகளும் கடந்த வியாழக்கிழமை அவர்களின் வீடுகளில் இருந்து காணாமல் போயியுள்ளனர். இதனால் பதறிப்போன பெற்றோர்கள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, குன்றத்தூர் துணை ஆய்வாளர் பரத் தலைமையிலான தனிப்படை காணாமல் போன மாணவிகளின் செல்போன்களின் டவர் இருப்பிடத்தைக் கண்காணித்து வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் இருக்கும் கண்டுபிடித்துள்ளனர். செல்போன் டவர் வட சென்னை பகுதியில் உள்ள கெஸ்ட் அவுஸ் இருக்கும் இடத்தை காட்டிய நிலையில், அங்கு உடனே விரைந்த போலீசார், இரு மாணவிகளையும் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் முக்கிய சந்தேக நபரான திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேன் என்கிற எஸ் அப்பு, சிறுமிகளுடன் நட்பாக பழகி, அவர்களை திருவொற்றியூர் கடற்கரைக்கு வரவழைத்து, அங்கு அந்த மாணவிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளான். பின்னர், அதில் ஒரு மாணவியின் மொபைல் போனை திருடிய அப்பு, அவர்கள் ஒரு மொபைலை விட்டுச் சென்றுவிட்டதாகவும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து அதை திரும்ப எடுத்துச் செல்லலாம் என்றும் அவர்களுக்கு போன் செய்துள்ளான்.

மாணவிகள் ரயில் நிலையம் திரும்பியதும், அவர்களுக்கு அப்பு மதிய உணவு அளித்த பின், தனது 4 நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து இருக்கிறான். அவர்களில் பட்டாபிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் (19), டெலிவரி ஏஜென்ட் இ.வினித் (20), விருத்தாசலம் இ.தொல்காப்பியன் (19), வாணியம்பாடியைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோர் ஆவர்.

இவர்கள் ஏழு பேரும் வட சென்னை பகுதியில் உள்ள கெஸ்ட் அவுஸ் தங்கி இருந்த நிலையில், அந்த இரு மாணவிகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், டெலிவரி ஏஜென்ட் வினித் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளது. அப்பு மீது கொள்ளை வழக்கு உள்ளது

இந்த 5 பேரையும் கைது செய்த சங்கர் நகர் போலீசார் ஐபிசி பிரிவு 366 (கற்பழிப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பிறகு தாம்பரம் மாஜிஸ்திரேட் அனுபிரியா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை ஜனவரி 12 வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் எனவும், வழக்கில் தொடர்புடைய சிறுவன் கெல்லிஸில் உள்ள சிறுவர் சீர்திருத்தும் மையத்திற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் தாம்பரம் மாஜிஸ்திரேட் அனுபிரியா உத்தரவு பிறப்பித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai crime news in tamil five including boy held for raping two girls in guest house north chennai

Best of Express