Advertisment

சென்னையில் மீண்டும் மின் விநியோகம் எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை துணை மின்நிலையத்தில் ஆய்வு செய்த பின் பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கனமழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Chennai Cyclone Michaung TN minster Thangam Thenarasu on power cut tamil news

மின் விநியோகத்தை சீரமைக்க களப்பணியில் கூடுதல் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் - அமைச்சர் தங்கம் தென்னரசு.

Chennai-rain | thangam-thennarasu: 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது. 

Advertisment

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வேளச்சேரி, மேற்கு தாம்பரம் செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. பல இடங்களில் பெய்துவரும் மழைநீர், அடையாற்றில் கலப்பதால் அடையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 

அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் 

தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் துணை மின்நிலையத்தில் ஆய்வு செய்த பின் பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கனமழை நின்றவுடன்  மின் விநியோகம் தொடங்கும் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

"துணை மின் நிலையங்களில் தேங்கியுள்ள தண்ணீரால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் நிலையங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால், மின்சாரத்தை கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. மழை பொழிவு குறைந்ததும் உடனடியாக மின் விநியோகம் சீராக வழங்கப்படும். அதுவரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும். 

மின் விநியோகத்தை சீரமைக்க களப்பணியில் கூடுதல் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மருத்துவமனைகளுக்கு தங்கு தடையின்றி மின் வழங்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Thangam Thennarasu Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment