பெண்ணை மறைமுகமாக ஸ்பை கேமிரா வைத்து படம்பிடித்த மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல் மருத்துவ படிப்பை படித்து வருகிறார் இப்ராஹிம். இவர் வீட்டில் பெண்ணும், அவருடைய கணவரும் சில ஆண்டுகளாக வாடகைக்கு தங்கி உள்ளனர்.
ஜனவரி 30ம் தேதி அந்த பெண், சிவப்பு நிற வெள்ளிச்சம் வித்தியாசமாக வருதை கண்டுபிடித்துள்ளார். அதுவும் ஒரு பேனாவிலிருந்து வருவதை கண்டுபிடித்து, தன்னை மறைமுகமாக யாரோ படம் எடுத்துள்ளனர் என்பது அவருக்கு தெரியவருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக அந்த பெண்ணும் அவரது கணவரும், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் இப்ராஹிம் கைது செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“