தூர்தர்ஷன் சென்னை உதவி இயக்குனர் வசுமதி திடீர் சஸ்பெண்ட்: மோடி நிகழ்ச்சியில் அலட்சியம் என புகார்

முன் அனுமதி பெறாமல் சென்னையை விட்டு, வசுமதி வெளியேறக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

By: Updated: October 2, 2019, 01:49:43 PM

Chennai Doordarshan Assistant Director R Vasumathi Suspended: தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் சென்னை உதவி இயக்குனர் வசுமதி திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்யாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் சென்னை கேந்திர உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் ஆர்.வசுமதி. இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் பிரசார் பாரதியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஷஷி சேகர் அறிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கை காலத்தின் முன் அனுமதி பெறாமல் சென்னையை விட்டு, வசுமதி வெளியேறக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

R Vasumathi suspended, Doordarshan kendra chennai R Vasumathi, சென்னை தூர்தர்ஷன், ஆர்.வசுமதி சஸ்பெண்ட் தூர்தர்ஷன் உதவி இயக்குனர் வசுமதி சஸ்பெண்ட்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன், பொதிகை சேனல்கள் சரியாக நேரலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையிலேயே வசுமதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனினும் நடவடிக்கைக்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai doordarshan assistant director r vasumathi suspended

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X