சென்னையில் மட்டும் 38 லட்சம் வாக்காளர்கள் – வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

chennai draft voter list : அதிகபட்சமாக, வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர் என்றும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில், ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர்

Tamil nadu,election commission, electoral list, chennai, voters, voter list, election body
Tamil nadu,election commission, electoral list, chennai, voters, voter list, election body, தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல், சென்னை, தமிழ்நாடு, வாக்காளர்கள், வாக்காளர் சிறப்பு முகாம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில், சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளதாகவும், 32 ஆயிரத்து 362 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

அதிகபட்சமாக, வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர் என்றும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில், ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவம் 6, பெயர்களை நீக்கம் செய்திட படிவம் 7 , பட்டியலில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்திட படிவம் 8, அதே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A பூர்த்தி செய்து அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? இல்லையெனில் உடனே சேர்த்துக்கொள்ளுங்கள் – இதோ வழிமுறை

23.12.2019 முதல் 22.01.2020 வரை வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களிலும் அலுவலக வேலை நாட்களில் மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளித்திடலாம்.

4.1.2020, 5.1.2020, 11.1.2020 மற்றும் 12.1.2020 ஆகிய 4 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து அளித்திடலாம். பெறப்படும் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 14.02.2020 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai draft voter list chennai voters list released

Next Story
காவிரி போராட்டம் : ஸ்டாலின் ஆஜராக நீதிமன்றம் சம்மன்cauvery protest, dmk, stalin, chennai special court, cauvery management board, summon
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com