/indian-express-tamil/media/media_files/hIYZUqAlAY41SLFYZDPo.jpg)
Chennai driver gets Rs 9000 crore from TMB bank
பழநியை சேர்ந்த கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பழநி நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், சென்னையில் கால்டாக்சி ஓட்டுநராக வேலைப் பார்த்து வருகிறார்.
கடந்த 9ம் தேதி ராஜ்குமார் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து ராஜ்குமார் வங்கிக் கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக குறிப்பிட்டிருந்தது.
தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருந்த நிலையில், இது ஒரு மோசடியாக இருக்கும் என்று ராஜ்குமார் ஆரம்பத்தில் நினைத்தார்.
தொடர்ந்து இது உண்மைதானா என்பதை சோதிக்க ராஜ்குமார் தனது நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாயை அனுப்பி உள்ளார். பரிவர்த்தனை சுமூகமாக நடந்தது. அப்போதுதான் 9 ஆயிரம் கோடி ரூபாய் தன் வங்கிக்கணக்கிற்கு வந்தது உண்மை என்பதை ராஜ்குமார் உணர்ந்தார்.
இருப்பினும் அவரது மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை.
நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பிய சற்று நேரத்தில் ராஜ்குமார் வங்கிக்கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திரும்பி எடுத்துக்கொண்டது.
பின்னர் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை, தொலைபேசியில் அழைத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் செலவு செய்த ரூ.21 ஆயிரத்தை திருப்பி கொடுக்க வேண்டாம் எனவும், பதிலாக வாகன கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பு கூறியதாக தெரிகிறது.
வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் திடீரென 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பேசு பொருளாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.