சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்ட இரண்டு ரயில்கள் நேற்று தாமதமாக கிளம்பின. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 15.10க்கு கிளம்ப வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரயில் 23.10க்கு கிளம்பியது.
அதேபோல் ரயில் எண் 12840 டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்டிரல் - ஹவுரா மெயில் மே 20 19.00 மணிக்கு கிளம்ப இருந்த நிலையில் 2 மணி நேரம் தாமதமாக 21 மணிக்கு கிளம்பியது. இந்தத் தகவலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை 4வது ரயில் பாதை
இதற்கிடையில், “சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான நான்காவது ரயில் பாதைத் திட்டப் பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (எம்ஆர்டிஎஸ்) சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதுவரை ஏழு சிறிய பாலங்கள் மற்றும் ஒரு பெரிய பாலம் கட்டும் பணி முடிவடைந்துள்ளதாகவும், கூவம் ஆற்றின் அருகே ரயில் பாதை அமைப்பதற்கான கும்மிடப் பணி நடந்து வருகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“