Chennai Egmore Railway Station Viral video: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டீ கேனில் கழிவு நீர் சேர்க்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து கவனம் பெற்றது குறிப்பிடத் தக்கது.
விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…
தென் மாநிலங்களில் பெரிய ரயில் நிலையங்களில் சென்னை எழும்பூர் ரயில் நிலையமும் ஒன்று. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். அவர்களில் பலர் இங்கு நடை மேடைகளில் கேன்களில் விற்கப்படும் டீ, காபி ஆகியவற்றை வாங்கிப் பருகுகின்றனர்.
இந்தச் சூழலில் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோக் காட்சி பயணிகளின் வயிற்றைக் கலக்கியது. அதாவது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்த தண்ணீர் சப்ளை ஆகும் பைப்பில் இருந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கும் ஒருவர், அதை டீ கேனில் சேர்க்கும் காட்சியே அது.
It happens just before 9.25pm at Chennai Egmore Railway station Platform No 7.
here after u won't drink tea coffee in tamilnadu Watch what he is doing, adding toilet use water in milk ( near coffee machine)... Share more...@PiyushGoyalOffc @GMSRailway pic.twitter.com/dQ1GvzFJYD— COOLRAJ SAKHLECHA (@trishlaroshni) January 18, 2020
இதனால், ‘கழிவறைக்கு பயன்படுத்துகிற தண்ணீரை டீ-யில் சேர்ப்பதா?’ என்கிற ரீதியில் அந்த வீடியோவை வெளியிட்டு பலரும் சமூக வலைதளங்களில் காய்ச்சினர். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டவர்களுக்கு ட்விட்டரில் டேக் செய்தனர்.
இதைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள், சென்னை எழும்பூரில் 7-வது பிளாட்பாரத்தில் உள்ள மேற்படி டீக்கடைக்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக ஒரு விளக்கத்தையும் வெளியிட்டனர். அதிகாரிகள் தங்கள் விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
‘அந்த தண்ணீர் டீயில் கலக்க பயன்படுத்தப்படவில்லை. பால் கேனில் இரண்டு பகுதிகள் உள்ளன. உள் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் பால் சூடாக இருப்பதற்காக வெளிப்பகுதியில் வெந்நீர் நிரப்பப்படும். அதற்குத்தான் கடை விற்பனையாளர் அந்த தண்ணீரை பயன்படுத்தி இருக்கிறார்.
கழிவறைகளுக்கு பயன்படுத்தும் தண்ணீரை டீ தயாரிக்க பயன்படுத்துவதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் தவறானது.
சுத்தப்படுத்தும் பணிகளுக்காக குழாய்களில் அனுப்பப்படும் தண்ணீரை அந்த விற்பனையாளர் கேனில் பிடித்துள்ளார். அந்த தண்ணீர் மெட்ரோ வாட்டர் மூலம்தான் சப்ளை செய்யப்படுகிறது. அதே தண்ணீர்தான் நடைமேடைகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த தண்ணீர் குளோரின் கலக்கப்படுவதால் பாலில் கலக்கவும் முடியாது. அப்படி கலந்தால் பால் கெட்டு விடும். உணவு தயாரிப்புகளுக்கு ஆர்.ஓ. தண்ணீரை பயன்படுத்தும்படி கடை உரிமையாளர்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்தும் வருகிறார்கள்.
7-வது நடைமேடையில் இந்த ஒரு கடைக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இப்போது அந்த கடை மூடப்பட்டு விட்டதால் பயணிகளுக்குத்தான் சிரமம்’ என்று ரெயில்வே அதிகாரி கூறியிருக்கிறார்.
எனினும் சமூக ஊடகங்களின் பங்கு காரணமாகவே இது போன்ற விஷயங்கள் வெளியே வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.