சென்னை எழும்பூரில் இருந்து கடலூர், திருச்சி, பழனி வழியாக கோவைக்கு இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து விபரம் வருமாறு;
ஏப்ரல் 18 மற்றும் 20 தேதிகளில் எழும்பூரில் இருந்து மாலை 4.25 க்கு புறப்படும் ரயில் கடலூர் சந்திப்பிற்கு, இரவு 8.48 க்கு வந்து மறுநாள் காலை 8.20 க்கு கோவை சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் ஏப்ரல் 19, 21 தேதகளில் இரவு 8.40 க்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 5.33 மணிக்கு கடலூர் சந்திப்பிற்கு வந்து காலை 10.05 க்கு எழும்பூர் சென்று சேரும்.
நிறுத்தங்கள்
தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர் துறைமுகம் சந்திப்பு, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர்
வண்டி எண் : 06003/06004.
இதேபோல் சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு தேர்தல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன் முன்பதிவு இன்று துவங்கியது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“