சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் என்று மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பல ஆயிரம் மக்கள் அன்றாட பணிக்கு செல்லவும், பல்வேறு தேவைகளுக்குகாக மின்சார ரயிலில் பயணிக்கின்றனர். பயணிகள் பாதுகாப்பிற்காகவும், ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிக்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.