சென்னை மயானங்களில் காலியிடங்கள்: ஆன்லைனில் அறிந்து கொள்ள மாநகராட்சி நடவடிக்கை
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உயிரை தகனம் செய்வதற்காக, இடுகாடுகளில் காலி இடம் குறித்த தகவல்களை ஆன்லைனில் தெரிவிக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Chennai Corporation to Introduce Creamatorium Status in Online : தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில் தொற்று எண்ணிக்கை 33,000 ஐ கடந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கான தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6500 ஐ கடந்துள்ளது. சென்னையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். சென்னையில் உள்ள இடுகாடுகளில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உயிரை தகனம் செய்வதற்காக, இடுகாடுகளில் காலி இடம் குறித்த தகவல்களை ஆன்லைனில் தெரிவிக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Advertisment
சென்னையின் 9-வது மண்டலமான நுங்கம்பாக்கத்தில் கொரோனா தொற்று தொலைத்தொடர்பு உதவி மையத்தை திறந்து வைத்த பின், சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சென்னையில் உள்ள இடுகாடுகளில் உடல்களை தகனம் செய்வதற்கு தேவையான வசதிகளை தடையில்லாமல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அதிக அளவிலான இறப்பு எண்ணிக்கை பதிவாகி வரும் சூழலில், மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த இடுகாடுகள், இனி 9 மணி வரை செயல்படும்.
மின் மயானங்கள் மற்றும் இடுகாடுகளில் உடலை தகனம் செய்ய காலியிடம் இருக்கிறதா, இல்லையா போன்ற விவரங்களை, ஆன்லைன் வாயிலாக தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது வரும் செவ்வாய் கிழமைக்குள் நடைமுறைக்கு வரும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)