சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 நைட் ஸ்ட்ரீட் கார் பந்தயம் தமிழக பாஜகவுக்குள் சூடான விவாதத்தை ஏற்படுத்தி, கட்சியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு இடையே பிளவை உருவாக்கியது.
கார் பந்தயம் நடத்தியதற்காக மூத்த தலைவர்கள் மாநில அரசை விமர்சித்த நிலையில், பாஜக இளைஞர் அணி மாநிலத் தலைவர் வினோஜ் பி செல்வம் மற்றும் பாஜக விளையாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் அலிஷா அப்துல்லா போன்ற கட்சியில் உள்ள இளைய தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
கார் பந்தய நிகழ்வை நேரில் பார்த்த புகைப்படத்தை வினோஜ், X பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். ரேஸர் ஆன அலிஷா, ஒரு படி மேலே சென்று, ஏற்பாடுகளுக்காக மாநில அரசாங்கத்தைப் பாராட்டினார்.
"நான் வெளிநாடுகளில் பல தெரு கார் பந்தயங்களில் கலந்து கொண்டேன், இது அதற்கு இணையாக உள்ளது" என்று அலிஷா கூறினார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்காகத்தான் இந்த பந்தயம் நடத்தப்பட்டது என்று எச்.ராஜா போன்ற மூத்த தலைவர்கள் விமர்சித்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உதயநிதி விளையாட்டுத் துறைக்கு நிறைய செய்திருக்கிறார், என்று அலிஷா பாராட்டினார்.
இதனிடையே கட்சி, தமிழகத்தில் எரியும் பிரச்சனைகளில் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்று ராஜா, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார், அங்கு தற்போது உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னைக்கு வெளியே நிறைய இடங்கள் உள்ளன, அது ஏன் மக்களுக்கு தொந்தரவாக நகரத்திற்குள் நடத்தப்பட்டது? என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.
நகரின் மையப்பகுதியில் பந்தயத்துக்கு அனுமதி வழங்கியது ஏன் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கேள்வி எழுப்பினார்.
’கட்சி கொடிக்கம்பம் வைக்க கூட எங்களுக்கு அனுமதியில்லை, பந்தய போட்டி நடத்த அனுமதி கொடுத்தது எப்படி? ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளது, அங்கு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வர வேண்டி இருந்தது. ஆனால், சாலையில் அவசரகால வாகனங்கள் செல்லவும் சாலை தடைப்பட்டது, என்றார் நாகராஜன்.
இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் F4 நைட் ஸ்ட்ரீட் கார் பந்தயத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ANS பிரசாத், பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்படும் கட்சி நிர்வாகிகள் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“