பிரபல ஆசிஃப் பிரியாணி ஓட்டலுக்கு சீல் வைப்பு! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ஆக்‌ஷன்!!

Chennai Aasife Biriyani Restaurant Sealed by Food Security Department: சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஆசிஃப் பிரியாணி உணவகத்திற்கு சீல் வைப்பு

Aasife Biriyani Sealed by Food Security Department: சென்னை கிண்டியில் அமைந்துள்ள பிரபல ஆசிஃப் பிரியாணி ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் பல பகுதிகளில் பிரபலமாக நடத்தப்பட்டு வரும் உணவகங்களில் ஒன்று ஆசிஃப் பிரியாணி. சென்னையின் பல பகுதிகளில் அமைந்துள்ள இந்த உணவகத்திற்கு தினமும் அதிகமான வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

Aasife Biriyani Sealed by Food Security Department: ஆசிஃப் பிரியாணி ஓட்டலுக்கு சீல் வைப்பு :

அத்தகைய பிரபல ஆசிஃப் பிரியாணி ஓட்டல் கிண்டியிலும் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அந்த உணவகத்தில் சாப்பிட்ட பொதுமக்கள் பலரும், அங்கு அளிக்கப்படும் உணவு சரியில்லை என்று கூறி வந்துள்ளனர். பலரும் உணவு சுவையாக இல்லை, தரமாக இல்லை என்று புகார் அளித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை கிண்டி ஓட்டலுக்கு சீல் வைத்தது. அந்த சோதனையில், தரமான இறைச்சி பயன்படுத்தாத காரணத்தால் சீல் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கிண்டி தவிர்த்து பிற இடங்களிலும் இதே உணவகம் தரமாக செயல்படுகிறதா என்ற விசாரணையும் நடைபெற்று வருகின்றது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close