சென்னை, வேளச்சேரி தண்டிஸ்வரன் சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வங்கியில் இருந்த பேப்பர்கள், சில படிவங்கள் எரிந்து சேதமாகின.
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகா் பிரதான சாலையில் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நேற்று இரவு 8.30 மணியளவில் லாக்கர் ரூம் அருகே உள்ள எலக்ட்ரிக் மீட்டர் பொருத்தப்பட்ட அறையில் இருந்து திடீரென்று கரும்புகை வந்தது. பற்றி எரிந்த தீயில் வங்கியின் படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்தன.
இதைப் பார்த்த வங்கி ஊழியர்கள் வங்கியில் இருந்து வெளியேறி, உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 3 தீயணைப்பு வண்டிகளில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கரும்புகை அதிக அளவு வெளியேறியதால் தீயணைப்பு வீரர்களுக்கு தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
புகைமூட்டத்தால் வங்கிக்குள் செல்ல முடியாததால், ஆக்சிஜன் சிலிண்டர் கட்டிக் கொண்டு உள்ளே சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், அருகில் உள்ள ஸ்டாங் ரூமில் இருந்த பல லட்ச கணக்கான ரூபாய் நோட்டுகள் தப்பியது.
இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த பேப்பர்கள், சில படிவங்கள் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கு, மின்கசிவு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்து குறித்து வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“