சென்னையில் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாராகி வருகிறது. சென்னையில் போரூர் முதல் பூந்தமல்லி வரை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் தடப் பணிகளை மின்மயமாக்கும் வேலைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் போரூர் முதல் பூந்தமல்லி வரையிலான 2ம் கட்ட மெட்ரோ வழித்தடத்தை மின்மயமாக்கும் பணியை தொடங்கியுள்ளது. சென்னையில் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் வருவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளில், மேல்நிலை உபகரணங்களை தாங்குவதற்கான உயரமான கம்பங்களை நிறுவும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கம்பங்கள் நீளமாக உள்ள ரயில்களுக்கு மின்சாரத்தை வழங்கும். போரூர்-பூந்தமல்லி பிரிவு, கோடம்பாக்கத்தில் உள்ள பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26.1 கி.மீ தொலைவில் 16 கி.மீ காரிடார் 4-க்குள் ஒரு பகுதியாகும். மெட்ரோ கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது.
இதில், 2025-ம் ஆண்டு இறுதிக்குள் 16 கி.மீ நீளம் கொண்ட மெட்ரோ ரயில் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை பணிகள் நிறைவடைந்தால் 116.1 கிமீ நீளம் கொண்டதாக இருக்கும். மொத்தம் 500 உயரமான தூண்கள் நிறுவப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதில், 200 தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தூண்களை நிறுவும் பணி தற்போது நடந்து வருகிறது, விரைவில் முடிவடையும்” என்று அவர் மேலும் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு பாலஸ்ட்லெஸ் பாதையை நிறுவும் பணியும் தொடங்கியது. சென்னையின் முதல் ஓட்டுநர் இல்லா ரயில் இந்த பாதையில் இயக்கப்படும், பூந்தமல்லி கட்டுமானத்தில் உள்ள டெப்போவில் பராமரிக்கப்படலாம்.
“மெட்ரோ ரயில் அமைக்கும் பணி முடிந்ததும், மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமானம் தொடங்கும் முன் நாங்கள் தொடர்ச்சியான சோதனைகளை நடத்துவோம்” என்று இயக்குனர் (திட்டங்கள்) டி அர்ச்சுனன் கூறினார்.
போரூர் - பூந்தமல்லி தடத்தில் 8 கி.மீ-க்குள் 10 மேல்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“