Advertisment

Chennai Flood Updates: வடசென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்னும் வடியாத வெள்ளம்- பொதுமக்கள் பாதிப்பு

Chennai Floods 2023, Chennai Rains, Michaung Cyclone: மிக்ஜாம் புயல் சென்னை மழை பாதிப்பு லேட்டஸ்ட் அப்டேட்ஸ்- 07 December 2023.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai floods

IE Tamil News Today

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம்புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். பால், உணவு பொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisment

சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (டிச.7) சென்னை வந்து புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் சென்றார். 

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.  தமிழகத்தில் புயல் பாதிப்பு,  எடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

  • Dec 08, 2023 07:07 IST
    பொதுமக்கள் வலியுறுத்தல்

    வடசென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடியாததால் பாதிப்பு தொடர்கிறது. தண்ணீர் அகற்றும் பணிகளை தீவிரப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்



  • Dec 08, 2023 04:40 IST
    பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கசிவு - மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம் 

    பக்கிங்காம் கால்வாயில் கலந்த எண்ணெய் CPCL தொழிற்சாலையைச் சார்ந்தது; எண்ணெய் கசிவு தொடர்பாக CPCL நிறுவனத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுளது என்று  மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.



  • Dec 08, 2023 04:34 IST
    3 அமைச்சர்கள் ராஜினாமா

    மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங், ரேணுகா சிங் ராஜினாமா செய்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூவரும் வெற்றி பெற்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். 3 அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார்.



  • Dec 07, 2023 21:29 IST
    தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மேலும் 70 மோட்டார்கள் அனுப்பப்படும் - கே.என். நேரு 

    "மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற மேலும் 70 மோட்டார்கள் அனுப்பப்படும்" என்று அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறினார்.



  • Dec 07, 2023 21:25 IST
    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு 

    தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 07, 2023 21:18 IST
    11 டன் பால் பவுடர் வினியோகம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், “இன்று (டிச. 8) 11 டன் பால் பவுடர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 



  • Dec 07, 2023 20:38 IST
     `மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகில் சென்று சீமான்  உதவி

    சென்னையில் `மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படகில் சென்று நிவாரணப் பொருட்களை உதவினார்.



  • Dec 07, 2023 20:38 IST
     `மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகில் சென்று சீமான்  உதவி

    சென்னையில் `மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படகில் சென்று நிவாரணப் பொருட்களை உதவினார்.



  • Dec 07, 2023 20:31 IST
    இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரி... மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நடவடிக்கை எடுக்க வெனெடும் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • Dec 07, 2023 19:55 IST
    டிச.11ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

    “மிர்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டிச.11ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்” என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
    அதேநேரத்தில் புத்தகம், சீரூடைகளை இழந்த மாணவ-மாணவியருக்கு புதிய உடைகள், புத்தகங்கள் வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • Dec 07, 2023 19:38 IST
    தேங்கிய மழை நீர் வெளியேற்றிய பின்னர் மின் இணைப்பு: ஷிவ்தாஸ் மீனா

     

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் 95% பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. 18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    850 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு பணியாளர்கள் களத்தில் உள்ளனர். 3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர்
    343 இடங்களில் தண்ணீரை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதிகளில் மின் இணைப்பை சரி செய்ய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
    தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை முழுமையாக வெளியேற்றிய பின், மின் இணைப்புகள் சீராகும்” என்றார்.



  • Dec 07, 2023 18:52 IST
    திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


    திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிச.8, வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.



  • Dec 07, 2023 17:42 IST
    சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Dec 07, 2023 17:11 IST
    சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.08) விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

     



  • Dec 07, 2023 15:11 IST
    தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு பெய்ய வாய்ப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு



  • Dec 07, 2023 15:10 IST
    ரயில்கள் ரத்து

    செங்கல்பட்டில் இருந்து இன்று தெலங்கானாவின் காச்சிகுடா செல்லும் விரைவு ரயில் முழுவதும் ரத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று செண்ட்ரல் வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு



  • Dec 07, 2023 15:09 IST
    நிவாரண பணி: ரூ.5060 கோடி வழங்கக் கேட்டுக் கொண்டேன்- ஸ்டாலின்

    நிவாரண பணியை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5060 கோடி வழங்கக் கேட்டுக் கொண்டேன். தமிழ்நாடு அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து உரிய நிவாரண நிதி வழங்க ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டேன்- ஸ்டாலின் 



  • Dec 07, 2023 15:03 IST
    தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்

    புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தேன். முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் - ராஜ்நாத் சிங்



  • Dec 07, 2023 14:47 IST
    450 கோடி ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி- ஸ்டாலின் 

    முதல்கட்டமாக 450 கோடி ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி- ஸ்டாலின் 



  • Dec 07, 2023 13:49 IST
    ஆவடியில் மீண்டும் மழை

    ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. 



  • Dec 07, 2023 13:22 IST
    ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

    சென்னை மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை



  • Dec 07, 2023 13:19 IST
    தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

    மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்பு - தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு



  • Dec 07, 2023 13:10 IST
    வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்

    சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.



  • Dec 07, 2023 12:54 IST
    'அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் உறுதி' - டி.ஆர்.பாலு


    உடனடி தேவையாக ரூ.2000 கோடி நிவாரண வழங்க பிரதமரிடம் வலியுறத்தி உள்ளோம். 
    மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளோம். 
    தமிழகத்திற்கு  தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
    ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ய பின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதாக மோடி கூறினார்.



  • Dec 07, 2023 12:31 IST
    JCB வாகனத்தில் வீடு வீடாக சென்று உணவுப் பொருட்கள் விநியோகம்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் பகுதிகளில், JCB வாகனத்தில் வீடு வீடாக சென்று நிவாரணம் மற்றும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்தார் அமைச்சர் எ.வ.வேலு. 

     

     



  • Dec 07, 2023 12:30 IST
    தரமணியில் மழை பாதித்த இடங்களில் அன்புமணி ஆய்வு

    சென்னை தரமணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

    முன்னதாக, வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார் அன்புமணி ராமதாஸ். வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். 



  • Dec 07, 2023 12:18 IST
    ஸ்டாலினிடம் மழை பாதிப்பு விவரங்களை கேட்டறிந்த மோடி

    மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்புகள், மீட்புப் பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். வெள்ள பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய மத்தியக் குழு அனுப்பி வைக்க மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை 



  • Dec 07, 2023 11:53 IST
    நிவாரணப் பொருட்கள் வழங்கிய ஸ்டாலின் 

    செங்கல்பட்டு அனகாபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், நைலான் பாய், போர்வை மற்றும் உணவு, குடிநீர் பாட்டில்களை வழங்கிய ஸ்டாலின் 



  • Dec 07, 2023 11:53 IST
    நிவாரணப் பொருட்கள் வழங்கிய ஸ்டாலின் 

    செங்கல்பட்டு அனகாபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், நைலான் பாய், போர்வை மற்றும் உணவு, குடிநீர் பாட்டில்களை வழங்கிய ஸ்டாலின் 



  • Dec 07, 2023 11:49 IST
    ரூ.4,000 கோடி வெள்ளை அறிக்கை தேவை - இ.பி.எஸ்

    மிக்ஜாம் புயல், மழையால் பாதித்த பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு. நிவாரணப் பணிகள் நடக்கவில்லை. பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். 

    ரூ.4,000 கோடிக்கான மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 



  • Dec 07, 2023 11:49 IST
    ரூ.4,000 கோடி வெள்ளை அறிக்கை தேவை - இ.பி.எஸ்

    மிக்ஜாம் புயல், மழையால் பாதித்த பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு. நிவாரணப் பணிகள் நடக்கவில்லை. பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். 

    ரூ.4,000 கோடிக்கான மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 



  • Dec 07, 2023 11:49 IST
    ரூ.4,000 கோடி வெள்ளை அறிக்கை தேவை - இ.பி.எஸ்

    மிக்ஜாம் புயல், மழையால் பாதித்த பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு. நிவாரணப் பணிகள் நடக்கவில்லை. பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். 

    ரூ.4,000 கோடிக்கான மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 



  • Dec 07, 2023 11:30 IST
    பள்ளிக்கரணை: வெள்ளத்தில் இருந்து குடும்பத்தை மீட்ட மகன் பலி

    சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ள நீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பற்றிய மகன் உயிரிழப்பு

    3 நாட்களுக்கு பிறகு வெள்ளநீரில் மிதந்து வந்த இளைஞர் அருணின் சடலம்



  • Dec 07, 2023 11:18 IST
    மழை பாதிப்பு: வீடு தேடிச் சென்று உதவித்தொகை வழங்கிய பாலா

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 என 2 லட்சம் ரூபாய் வீடு தேடிச் சென்று உதவித்தொகை வழங்கிய நடிகர் பாலா. 



  • Dec 07, 2023 11:02 IST
    சி.டி.ஒ காலணியில் மின் விநியோகம் சீரானது

    மேற்கு தாம்பரத்தில் உள்ள சி.டி.ஒ காலணியில் வெள்ளம் முழுவதுமாக வடிந்த நிலையில் அப்பகுதியில் மின் விநியோகம் சீரானது.



  • Dec 07, 2023 11:00 IST
    தெற்கு ரயில்வே அறிவிப்பு

    கொல்லம் - சென்னை எழும்பூர் செல்லும் ரயில் இன்று பகல் 1 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு



  • Dec 07, 2023 10:49 IST
    சென்னையில் 2வது நாளாக ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்

    சென்னையில் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2வது நாளாக ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்படுகிறது.

                                                                                 



  • Dec 07, 2023 10:37 IST
    புழல் ஏரியின் கரை உடையும் அபாயம்

    Credit:PuthiyathalaimuraiTV Twitter



  • Dec 07, 2023 10:34 IST
    சென்னையில் 2,000 மெகாவாட் மின் தேவை அதிகரிப்பு

    சென்னையின் மின் தேவை 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உயர்ந்துள்ளது.

    சென்னையில் பல்வேறு இடங்களுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டு வருவதால் மின் தேவை அதிகரிப்பு- மின்சார வாரியம்



  • Dec 07, 2023 10:31 IST
    80% மின்விநியோகம் சீரானது- மின்வாரியம்

    சென்னை பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் 80 சதவீதம் மின் விநியோகம் சீரானது. பிற பகுதிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும்.

    வடசென்னையில் எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை முதல் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது- மின்வாரியம்



  • Dec 07, 2023 10:24 IST
    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னுடைய வீட்டில் உணவு தயார் செய்து வழங்கிய கனிமொழி எம்.பி.

    Credit; Sun News Twitter



  • Dec 07, 2023 10:18 IST
    ராம் நகர் தெற்கில் வெள்ளநீர் வடிந்துவிட்டது- டி.ஆர்.பி. ராஜா

    ராம் நகர் தெற்கின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் வெள்ளநீர் வடிந்துவிட்டது.

    ராம்நகர் 14.15.16 மற்றும் குபேரன் 12,13,14,15 மற்றும் Lic நகர் தவிர

    பால் தண்ணீரும் வழங்கப்பட்டது. பல பகுதிகளில் படகுகள் தேவைப்படாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது எடுக்கப்பட்ட படம் இணைக்கப்பட்டுள்ளது

     



  • Dec 07, 2023 09:38 IST
    அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு



  • Dec 07, 2023 09:37 IST
    அடுத்த 6 நாட்களுக்கு மழை

    தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்



  • Dec 07, 2023 09:36 IST
    போக்குவரத்து துண்டிப்பு

    Credit: Sun News Twitter



  • Dec 07, 2023 08:47 IST
    வேளச்சேரி டான்சி நகர் பகுதியில் நேற்று நடந்த மீட்பு பணி- ககந்தீப் சிங் ஆய்வு



  • Dec 07, 2023 08:43 IST
    சென்னையில் பனிமூட்டத்தால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்

    சென்னையில் பனிமூட்டம் நிலவுவதால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

    சென்னையில் இருந்து மதுரை, கோவை, கொல்கத்தார் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு!



  • Dec 07, 2023 08:18 IST
    சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக ரயில் சேவை மாற்றம்

    Credit: Thanthi TV Twitter



  • Dec 07, 2023 07:46 IST
    சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்து இயக்கம் சீரானது

    மொத்தமுள்ள 603 வழிதடங்களிலும் மாநகர பேருந்துகள் இயக்கம்

    பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் முழுமையாக வடிந்துவிட்ட நிலையில் மாநகரப் பேருந்துகளின் இயக்கம் சீராகியுள்ளது. வழக்கமாக நாளொன்றுக்கு 2600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன- மாநகரப் போக்குவரத்து கழகம் தகவல்



  • Dec 07, 2023 07:42 IST
    சென்னையின் கடுமையான பனிமூட்டம்

    Credit: Sun News Twitter 



Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment