மிக்ஜாம் புயல், மழை காரணமாக திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்பு உள்ளாகி மழை நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகின்ற 17ம் தேதி அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க இளைஞர் அணி 2வது மாநில மாநாடு மாற்றப்பட்டு வருகிற 24ம் தேதி நடைபெறும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, சேப்பாக்கத்தில் திரை கலைஞர்களால் டிச.24ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த `கலைஞர் 100' விழா ஜனவரி மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“