Advertisment

Chennai flood updates: புயல் வெள்ள பாதிப்பு; கல்லூரிச் சான்றிதழ்கள் நகல்களைப் பெற தனி இணையதளம்; உயர்கல்வித் துறை

Chennai Rains 2023, Cyclone Michaung, Chennai Weather, Tamilnadu rain Latest Updates - 11 December 2023- மிக்ஜாம் புயல் சென்னை மழை பாதிப்பு: உடனடி அப்டேட்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai flood

Chennai Rains 2023 Updates

Chennai flood Live 2023 : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை பெய்ததால் சென்னையில் உள்ள பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சில இடங்களில் தண்ணீர் குறைந்திருக்கிறது. பல இடங்களில் மக்கள் அடிப்படை தேவையான உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அரசு சார்பில் மீட்பு மற்றும் நிவாரண பணியும் நடைபெற்று வருகிறது. சென்னை வெள்ளம் பாதிப்பு தொடர்பான அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

  • Dec 11, 2023 22:17 IST
    புயல் வெள்ள பாதிப்பு கல்லூரிச் சான்றிதழ்கள் நகல்களைப் பெற தனி இணையதளம் - உயர்கல்வித் துறை அறிவிப்பு

    மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள், கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற https://www.mycertificates.in/ என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது



  • Dec 11, 2023 20:51 IST
    சலுகை பயணச்சீட்டு; கல்லூரி மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

    மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்ததால், சென்னையில் சலுகை பயணச்சீட்டு அட்டையைப் பெற, கல்லூரி மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது



  • Dec 11, 2023 19:09 IST
    கொரோனா காலத்தை போல் நிவாரணம்; உதயநிதி

    கொரோனா காலத்தில் பின்பற்றிய முறையை போல, இம்முறையும் நிவாரணம் வழங்கப்படும் என சென்னை, சேப்பாக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Dec 11, 2023 18:52 IST
    கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை வழங்க முகாம்கள் நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி

    மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தில் கல்வி சான்றிதழ், குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை வழங்க முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.



  • Dec 11, 2023 18:34 IST
    மழை பாதிப்பு: ரூ.17.60 கோடிக்கு நிவாரண பொருட்கள வழங்கப்பட்டது -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.17.60 கோடிக்கு நிவாரண பொருட்கள வழங்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 10 லட்சத்து 77 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், 3 லட்சத்து 2 ஆயிரத்து 165 பிரட் பாக்கெட்டுகள், 13 லட்சத்து 8 ஆயிரத்து  847 பிஸ்கட் பாக்கெட்டுகள், 73.4 டன் பால் பவுடர்கள் வழங்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 



  • Dec 11, 2023 18:34 IST
    மழை பாதிப்பு: ரூ.17.60 கோடிக்கு நிவாரண பொருட்கள வழங்கப்பட்டது -  தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.17.60 கோடிக்கு நிவாரண பொருட்கள வழங்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 10 லட்சத்து 77 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், 3 லட்சத்து 2 ஆயிரத்து 165 பிரட் பாக்கெட்டுகள், 13 லட்சத்து 8 ஆயிரத்து  847 பிஸ்கட் பாக்கெட்டுகள், 73.4 டன் பால் பவுடர்கள் வழங்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 



  • Dec 11, 2023 18:29 IST
    கொருக்குபேட்டையில் சிறுமி உயிரிழப்பு - ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு

    சென்னை கொருக்குபேட்டையில் அ.தி.மு.க சார்பில் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டபோது, சிறுமி உயிரிழந்தது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூச்சுத் திணறியோ, மிதிபட்டோ சிறுமி உயிரிழக்கவில்லை என பிரேதப் பரிசோதனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Dec 11, 2023 18:29 IST
    கொருக்குபேட்டையில் சிறுமி உயிரிழப்பு - ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு

    சென்னை கொருக்குபேட்டையில் அ.தி.மு.க சார்பில் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டபோது, சிறுமி உயிரிழந்தது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மூச்சுத் திணறியோ, மிதிபட்டோ சிறுமி உயிரிழக்கவில்லை என பிரேதப் பரிசோதனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Dec 11, 2023 18:26 IST
    ‘நிவாரணப் பொருட்களில் அ.தி.மு.க-வைப் போல ஸ்டிக்கர் ஒட்டவில்லை’ - அமைச்சர் தங்கம் தென்னரசு

    அமைச்சர் தங்கம் தென்னரசு: “நிவாரணப் பொருட்களில் முதலமைச்சரின் படம் எந்த இடத்திலாவது உள்ளதா?; ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அம்மையார் படத்தையும், எடப்பாடி பழனிசாமி படத்தையும் போட்டுக்கொண்டார்கள். நாங்கள் அ.தி.மு.க-வைப் போல ஸ்டிக்கர் ஒட்டும் வேலைகளை செய்யாமல், யாருக்கு நிவாரணம் வழங்க வேண்டுமோ, அதை வழங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.



  • Dec 11, 2023 18:26 IST
    ‘நிவாரணப் பொருட்களில் அ.தி.மு.க-வைப் போல ஸ்டிக்கர் ஒட்டவில்லை’ - அமைச்சர் தங்கம் தென்னரசு

    அமைச்சர் தங்கம் தென்னரசு: “நிவாரணப் பொருட்களில் முதலமைச்சரின் படம் எந்த இடத்திலாவது உள்ளதா?; ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அம்மையார் படத்தையும், எடப்பாடி பழனிசாமி படத்தையும் போட்டுக்கொண்டார்கள். நாங்கள் அ.தி.மு.க-வைப் போல ஸ்டிக்கர் ஒட்டும் வேலைகளை செய்யாமல், யாருக்கு நிவாரணம் வழங்க வேண்டுமோ, அதை வழங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.



  • Dec 11, 2023 18:04 IST
    சென்னையில் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.6,000 நிவாரண நிதி - அமைச்சர் தங்கம் தென்னரசு 

    “சென்னையில் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் நிவாரண நிதியாக ரூ. 6,000 வழங்கப்படும்” -அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.



  • Dec 11, 2023 18:02 IST
    செங்கல்பட்டு வரை மீண்டும் ரயில்கள் இயக்கம்

    செங்கல்பட்டு அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகள் மீட்கப்பட்டது. போக்குவரத்து சீர்செய்யப்பட்டு மின்சார ரயில்கள் மீண்டும்  செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. சுமார் 9 மணி நேரத்திற்கு பின் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. 



  • Dec 11, 2023 18:02 IST
    செங்கல்பட்டு வரை மீண்டும் ரயில்கள் இயக்கம்

    செங்கல்பட்டு அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகள் மீட்கப்பட்டது. போக்குவரத்து சீர்செய்யப்பட்டு மின்சார ரயில்கள் மீண்டும்  செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. சுமார் 9 மணி நேரத்திற்கு பின் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. 



  • Dec 11, 2023 17:27 IST
    மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கினார் தி.க. தலைவர் கி.வீரமணி

    திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ. 10 லட்சம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்.



  • Dec 11, 2023 17:15 IST
    சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடைகோரி வழக்கு - ஐகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு

    சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்த கார் ரேஸை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



  • Dec 11, 2023 16:46 IST
    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மக்களுக்கு உதவி

    சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வியாசர்பாடி பகுதிகளில் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்.



  • Dec 11, 2023 16:44 IST
    எதிர்க்கட்சிகளுக்கு வைகோ கேள்வி

    சென்னை வெள்ள பாதிப்பு குறித்து  எதிர்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், குறை கூறுவதை விட்டு மத்திய ரூ.5000 கோடி கேட்டு வாங்கிதரலாமே? என எதிர்க்கட்சிகளுக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Dec 11, 2023 16:43 IST
    மக்களுக்கு உணவு கொடுக்கும் தி.மு.க எம்.பி கனிமொழி

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக எம்.பி கனிமொழி 6 நாட்களாக தனது வீட்டில் உணவு செய்து மக்களுக்கு கொடுத்துள்ளார். 



  • Dec 11, 2023 16:41 IST
    கமல்ஹாசன் மீது வானதி பாய்ச்சல்

    இப்போது அரசை குறை சொல்வதை விட களத்தில் இறங்கி வேலை செய்வதே முக்கியம் என்று நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், அரசியல் என்பது வசனம் பேசுவது அல்ல” என்று கமல்ஹாசன் மீது வானதி பாய்ச்சல்



  • Dec 11, 2023 16:39 IST
    பாத்ரூம் கூட போக முடியல : திருவள்ளூர் பகுதி மக்கள் வேதனை

    திருவள்ளூர் மற்றும் திருநின்றவூர் பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாத நிலையில், “பாத்ரூம் கூட போக முடியல...பிள்ளைகள் பள்ளிக்கு போக முடியாம இருக்காங்க” என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.



  • Dec 11, 2023 16:05 IST
    புயல் நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி வழக்கு

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரும் நிவாரணம் அளித்து வருகின்றனர். இதனிடையே தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர் தாக்கல் செய்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதில் ரேஷன் கடை மூலம் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சென்று சேராமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. பல்வேறு திட்டங்களுக்கான நிதியை வங்கி கணக்கில் செலுத்தும்போது, இந்த நிதியையும் வங்கி கணக்கில் செலுத்த சிக்கல் இருக்காது என்று கூறியுள்ளார்.



  • Dec 11, 2023 15:59 IST
    வடியாத வெள்ள நீர் : படகு மூலம் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரும் நிவாரணம் அளித்து வருகின்றனர். இதனிடையே பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட யமுனா நகர் பகுதியில் வெள்ள நீர் வடியாததால் குழந்தைகளை பெற்றோர்கள் படகு மூலம் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.



  • Dec 11, 2023 15:58 IST
    4 டன் வாழையை நிவாரணமாக வழங்கிய விவசாயி

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரும் நிவாரணம் அளித்து வரும் நிலையில், தஞ்சையை சேர்ந்த விவசாயி மதியழகன் தனது தோட்டத்தில் விளைந்த 4 டன் வாழையை நிவாரணமாக அளித்துள்ளார்.



  • Dec 11, 2023 15:18 IST
    ஆசிட் வெடித்து சிதறியதில் மாணவர்களுக்கு மூச்சுதிணறல்

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் வெடித்து சிதறிய விபத்தில் 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Dec 11, 2023 15:17 IST
    மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்திடுக : மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • Dec 11, 2023 14:59 IST
    பொது நிவாரண நிதிக்கு ₹5 கோடி வழங்கினார் கலாநிதிமாறன்



  • Dec 11, 2023 14:44 IST
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை

    புயல் வெள்ளத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் Control யூனிட்டுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் தேர்வுகள் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசிடம் கோரியது தேர்தல் ஆணையம்- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்



  • Dec 11, 2023 13:28 IST
    ரூ.10 லட்சம் வழங்கினார் கி.வீரமணி

     



  • Dec 11, 2023 13:22 IST
    வானிலை நிலவரம்

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.11) முதல் - டிச.17ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

                                              



  • Dec 11, 2023 13:14 IST
    சென்னையில் படகு மூலம் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

    Credit: Thanthi TV Twitter



  • Dec 11, 2023 13:13 IST
    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு"

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

     



  • Dec 11, 2023 13:13 IST
    ‘மிக்ஜாம்’ புயல் –நிவாரணத் தொகை பெற தகுதி படைத்தோர் யார்?

    ரேஷன் அட்டை வைத்திருப்போர்

    ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர்

    வாடகை ஒப்பந்தம் / கேஸ் பில் / ஆதார் அட்டையுடன் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வருவோர்

    டிச.16ம் தேதி முதல் டோக்கன் விநியோகம்          



  • Dec 11, 2023 13:12 IST
    டிச.16ம் தேதி முதல் டோக்கன் விநியோகம்

    மிக்ஜாம்புயல் -  ரூ.6000 நிவாரணத் தொகைக்கான டோக்கன் டிச.16ம் தேதி முதல் விநியோகிக்கப்படும்;

    டிச.20ம் தேதி முதல் நிவாரணத் தொகை வழங்கப்படும்



  • Dec 11, 2023 12:31 IST
    வெள்ள நிவாரண நிதி ரூ.6000: ஐகோட்டில் பொது நல வழக்கு

    வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு . சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் மனுத் தாக்கல். தமிழக அரசு நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால்  அதிகளவில் முறைகேடு நடைபெறும்- மனு

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு - மனு 



  • Dec 11, 2023 12:30 IST
    நாளைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும்

    "பெரு மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாளைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும்" -அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 



  • Dec 11, 2023 12:30 IST
    நாளைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும்

    "பெரு மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாளைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும்" -அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 



  • Dec 11, 2023 11:14 IST
    பள்ளிகள் திறப்பு - தலைமை செயலாளர் ஆய்வு

    மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக 9 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

    சென்னை, கிண்டியில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு



  • Dec 11, 2023 10:58 IST
    மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கினார் வைகோ

    மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணத்திற்காக ம.தி.மு.க சார்பில் ரூ. 10.20 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் வைகோ  



  • Dec 11, 2023 10:56 IST
    திராவிடர் கழகம் சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கினார் கி.வீரமணி

    மிக்ஜாம் புயல் பாதிப்பு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திராவிடர் கழகம் சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கினார் கி.வீரமணி



  • Dec 11, 2023 10:55 IST
    கேட்ட பணத்தை கொடுக்காத மத்திய அரசு : கே. பாலகிருஷ்ணன்

    கடுமையான நிதி நெருக்கடியில் மத்திய அரசு பணம் கொடுக்க மறுக்கிறது. 5 ஆயிரம் கோடி கேட்டால் ரூ. 450 கோடி கொடுக்கிறார்கள். இப்படி நெருக்கடியில் அரசாங்கம் இருக்க வேண்டும், அதனால் அவப் பெயர் ஏற்படும் என்று நிதி கொடுக்கவில்லை. – கே. பாலகிருஷ்ணன்    



  • Dec 11, 2023 10:20 IST
    எண்ணூர் டூ காசிமேடு: கடல் பரப்பில்: 10 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம்

    வெள்ளம் காரணமாக எண்ணூர் பகுதிகளில் தொழிற்சாலைகளில் உள்ள எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை, குடியிருப்பு என்று பல்வேறு இடங்களில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  இந்த எண்ணைக் கழிவுகள் எண்ணூரில் இருந்து காசிமேடு வரை கடலில் கலந்தது. கடலோர காவல் படையினர் 2 எலிகாப்டர் உதவியுடன் 10 டன் எண்ணை கழிவுகளை அகற்றி உள்ளனர். இதுபோல கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளி அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  



  • Dec 11, 2023 09:33 IST
    சென்னை: மழை பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை நாளை கட்டணமில்லாமல் பெறலாம்

    சென்னை: பெருமழை மழை பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை நாளை கட்டணமில்லாமல் பெறலாம். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் செயல்படும் 46 பகுதி அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.



  • Dec 11, 2023 09:05 IST
    மிக்ஜாம்' புயல் பாதிப்பு குறைந்த நிலையில், இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை

    மிக்ஜாம்' புயல் பாதிப்பு குறைந்த நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது. மக்கள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வதால் சாலைகள் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இதனால், சென்னை அடையார் திரு.வி.க பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 



  • Dec 11, 2023 08:49 IST
    ஒரு வாரத்திற்கு பிறகு: காலை உணவுத்திட்டத்தின் கீழ் சிற்றுண்டி சாப்பிட்டனர்

    சென்னையில் ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. திருவல்லிக்கேணியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டது.



  • Dec 11, 2023 08:40 IST
    கல்வி சான்றிதழ் பெற இன்று சிறப்பு முகாம்

    மழை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த கல்வி சான்றிதழ்களை கட்டணமின்றி பெற இன்று சிறப்பு முகாம். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு.



  • Dec 11, 2023 08:32 IST
    ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்த விஜயபாஸ்கர்

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்களை புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்



  • Dec 11, 2023 08:27 IST
    இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன

    மிக்ஜாம் புயல்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகளில் திறக்கப்பட்டுள்ளன.



  • Dec 11, 2023 08:11 IST
    வெள்ள பாதிப்பு: நிவாரணப் பணிகளுக்காக ரூ. 10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்

    நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலிடம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்



  • Dec 11, 2023 07:41 IST
    நேற்று இரவு சென்னையில் பெய்த மழை

    நேற்று இரவு  சென்னையின் மயிலாப்பூர், எம்.ஆர்.சி நகர், ராயப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.



  • Dec 11, 2023 07:38 IST
    28,563 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

    சென்னை முழுவதும் டிசம்பர் 6ம் தேதியில் இருந்து டிசம்பர் 9ம் தேதி வரை 28,563 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன - சென்னை மாநகராட்சி



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment