Chennai, Tamil Nadu Rain News : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையால் பாதித்த பகுதிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.
15 நாட்கள் கால அவகாசம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் – அமைச்சர் செந்தில் பாலாஜி. 28 ஆயிரம் இணைப்புகளில் மட்டும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவை சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
தத்தளிக்கும் வேளச்சேரி
- அரசு மருத்துவமனையில் வெள்ளம் : உடனடியாக மாற்றப்பட்ட நோயாளிகள்
- இளைஞரை தோளில் தூக்கி காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி: இணையத்தில் குவியும் பாராட்டு
- தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை… 77% அதிக மழைபொழிவு; எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு?
ரெட் அலெர்ட் வாபஸ்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
மழை பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி: தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஆண்டுக்கு ரூ.1,360 கோடியை ஒன்றிய அரசு தருவது வழக்கம்; இந்த ஆண்டுக்கான (2020-21) ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதியில் ரூ.300 கோடி நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழையை தொடர்ந்து நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அஜாக்ஸ் சுரங்கப்பாதையில் மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமாச்சந்திரன்: “டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. பயிர் சேதம் குறித்து கணக்கீடு எடுத்தபின் இழப்பீடு தொகை குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழையை தொடர்ந்து நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழையை தொடர்ந்து நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை 493 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு பிறகு டெங்கு பாதிப்பு குறையும். டெங்கு குறித்து ஒன்றிய அரசின் குழு ஆய்வு நடத்திவிட்டு சென்றுள்ளது. நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் கனமழை காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மழைநீரை வெளியேற்றி 12 மணி நேரத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
புயல் மற்றும் மழையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நாகை மாவட்டத்தில் பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை பார்த்தனர்.
சென்னை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் கொட்டும் மழையில் சுயனினைவின்றி கிடந்த வாலிபரை பெண் காவல் ஆய்வாளர் தோளில் சுமந்து மருந்துவமனையில் அனுமதித்த நிலையில், தற்போது அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிப்பில் இருக்கும்பொழுது விவாதங்களை தவிர்த்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் ‘விஜய் விலையில்லா உணவகம்’ மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
VMI – Vijay Makkal Iyakkam’s initiative – “#vilayillavirunthagam” was taken to the next level in the recent #chennairains. A Mobile Food Truck was used and food packets were distributed across the town. #thalapathyvijay #vijay #chennairains @BussyAnand pic.twitter.com/mQeuvwrX3U
— IndiaGlitz – Tamil (@igtamil) November 12, 2021
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 16 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், “மீட்பு நடவடிக்கைகளில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
வேலூர் பொன்னை அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 11,555 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர்வரத்து 15,000 கன அடியாக உயர வாய்ப்பு உள்ளது எனவும், கரையோர மக்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும் எனவும் வேலூர் ஆட்சியர் அறிவுறுத்த்தியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கெதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே முதலாவது டெஸ்டில் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சென்னை மழை: “இது வருடா வருடம் வரக்கூடிய பிரச்சினை. பருவமழையை பேரிடராக மாற்றியது நம்முடைய குற்றம். இதற்கு நாளும் பொறுப்பேற்க வேண்டும்.நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுப்பது எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும்.” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2000 கன அடியில் இருந்து 1500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25,000, பாதிப்படைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000, மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களின் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியுட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி நவம்பர் 12, 13, 14, 15, 16 ஆகிய 5 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி நவம்பர் 12, 13, 14, 15, 16 ஆகிய 5 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறத pic.twitter.com/6UmvYvZCYO
— TN SDMA (@tnsdma) November 12, 2021
குமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, விருதுநகர், தென்காசி, கோவை, தருமபுரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடாவுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுவார் என தஞ்சாவூரில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
30,000 தூய்மை பணியாளர்கள் சென்னையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தொடக்கம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதனால், தமிழ்நாட்டில் நாளை மறுதினம் முதல் மழைக்கு வாய்ப்பு . குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உதயா என்பவரின் உயிரைக் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரியை முதலமைச்சர்
மு.க ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னைக்கு அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்ற முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சென்னையில் மழை வெள்ள பாதிப்பை சரி செய்ய தமிழக அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போதைய நிலையில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று கூறி மனுவை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைக்கால இலவச மருத்துவ முகாமை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். சென்னையில் உள்ள 200 வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த மக்கள் நலவாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

சென்னையில் நேற்று 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று 7 சுரங்கப்பாதைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது
சூலூர்பேட்டை அருகே கலங்கி நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சூலூர்பேட்டை வரை இயக்கப்படும் புறநகர் ரயில்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக கும்மிடிப்பூண்டி வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளனர் மாவட்ட ஆட்சியாளர்கள்.
நீர் வரத்து குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 3,630 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 6,000 கன அடியாக உள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.
கன்னியாகுமரியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 2வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை