மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், வீடுகளில் இருந்த உடமைகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்தன. வெள்ளம் வடிந்த பின் பலரும் தங்கள் வாகனங்களை பழுது பார்த்து சரி செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இதனால், பழுது பார்க்கும் இடங்களில் வாகனங்கள் குவிந்து வருவதால், பழுது பார்க்கும் மெக்கானிக்குகள், பழுதுபார்ப்பவர்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை சரிசெய்ய தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராயல் என்ஃபீல்டு வண்டிக்கு 1800 2100 007 என்ற எண்ணும்; யமஹா வண்டிக்கு 1800 4201 600 என்ற எண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டிவிஎஸ் வாகனத்துக்கு 1800 2587 555 என்ற எண்ணும்; ஹோண்டா வாகனத்துக்கு 1800 1033 434 என்ற எண்ணும்; சுசுகி வாகனத்துக்கு 1800 1033 434 என்ற எண்ணும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாருதி சுசுகி வாகனத்துக்குப் பழுது பார்க்க 1800 1800 180 என்ற எண்ணும்; லன்சன் டொயோட்டோ வாகனத்துக்குப் பழுது பார்க்க 1800 1020 909 என்ற எண்ணும்; 1800 2090 909 என்ற எண்ணும் பழுது பார்ப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கியா மோட்டார்ஸ் வாகனத்துக்கு 1800 1085 000 என்ற எண்ணும்; ஹூண்டாய் வாகனத்துக்கு 1800 1024 645 என்ற எண்ணும் பழுது பார்ப்பதற்காக தரப்பட்டுள்ளது.
மேலும் டாடா மோட்டார்ஸ் வாகனத்துக்கு 1800 209 8282 என்ற எண்ணும், டொயோட்டோ வாகனத்துக்கு 1800 102 50001 என்ற எண்ணும் பழுது பார்ப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“