Advertisment

Chennai Flood Updates: வெள்ளத்தில் பழுதான வாகனங்களை பழுது பார்த்து தருவதாக காப்பீடு நிறுவனங்கள் உறுதி

Chennai Floods 2023, Chennai Rains 2023, Cyclone Michaung live, Chennai Weather, Tamil nadu rain Latest Updates - 8 December 2023- மிக்ஜாம் புயல் சென்னை மழை பாதிப்பு லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

author-image
WebDesk
New Update
chennai rain 1

Chennai floods 2023

Cyclone Michaung live: வங்கக் கடலில் உருவான மிக்ஜாம்புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisment

வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 450 கோடி, சென்னை வெள்ள தடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 561.29 கோடி நிதி வழங்கியுள்ளது

காப்பீடு நிறுவனங்கள் உறுதி

மிக்ஜாம் புயலால் சேதமடைந்த காப்பீடு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களை விரைவாக பழுது பார்த்து தருவதாகவும், காப்பீட்டுத் தொகையினை விரைந்து வழங்குவதாகவும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காப்பீடு நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

இதுவரை 600 இருசக்கர, 1275 நான்கு சக்கர மற்றும் 445 வணிக வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகைக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக காப்பீடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 09, 2023 07:02 IST
    நெல்லையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (டிச.9) விடுமுறை

    மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (டிசம்பர் 9) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு



  • Dec 08, 2023 23:20 IST
    திமுக இளைஞரணியின் மாநில மாநாடு ஒத்திவைப்பு

    சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணியின் மாநில மாநாடு, மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகள் காரணத்தால் டிசம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!



  • Dec 08, 2023 21:28 IST
    அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

    வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளர். மேலும் திண்டுக்கல், மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி, தேனி, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 08, 2023 20:32 IST
    சென்னை வெள்ளம் : ராயல் என்பீல்டு மோட்டார் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சலுகை

    புயல் பாதித்த சென்னை, புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்கள் இலவச டோ வசதி மற்றும் வாகன பரிசோதனை செய்து கொள்ளலாம் என ராயல் என்பீல்டு மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது



  • Dec 08, 2023 19:33 IST
    அமுதம் அங்காடிகளில் காய்கறி விற்பனை

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் காய்கறி விற்பனை நடைபெற்ற வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களைத் தடையின்றி, தரமாக வழங்குவதை உறுதிப்படுத்திடவும் அறிவுறுத்தியுள்ளது.



  • Dec 08, 2023 18:58 IST
    சென்னையில் 8 மையங்களில் 24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை

    சென்னையில் பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய 8 மையங்களில் 24 மணி நேரமும் ஆவின் பால், பால் பவுடர் மற்றும் பால் உப பொருட்கள் எப்போதும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், பெசண்ட் நகர், அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் ஆவின் பால் மற்றும் பால் பவுடர், பால் பொருட்கள் 24 மணி நேரமும்ம் விற்பனை செய்யப்படுகிறது.



  • Dec 08, 2023 18:52 IST
    மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு: அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - இ.பி.எஸ்

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “கனமழையால், சென்னையில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம். புயல் ஓய்ந்து 5 நாட்கள் ஆகியும், பல பகுதிகளில் தண்ணீர் வடியவில்லை. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 



  • Dec 08, 2023 18:42 IST
    டிச. 3 முதல் 8-ம் தேதி நவீன கேமராக்கள் மூலம் பதிவான சாலை விதிமீறல் வழக்குகள் ரத்து

    மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்த டிசம்பர் 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சாலைகளில் ஏ.என்.பி.ஆர் நவீன கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 6,670 சாலை விதி மீறல் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையைக் கருத்தில் கொண்டு இந்த ஒருமுறை மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Dec 08, 2023 18:29 IST
    புயல் வெள்ள நிவாரணப் பணிகள்: 4 மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடன் இ.பி.எஸ் ஆலோசனை 

    புயல் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 4 மாவட்ட நிர்வாகிகளுடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.



  • Dec 08, 2023 17:31 IST
    4 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (09.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களிலும் நாளை தனியார் பள்ளிகளையும் திறக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Dec 08, 2023 16:47 IST
    செயல்பாட்டுக்கு வந்த சென்னை சுரங்கப் பாதைகள்

    சென்னையில் மழைநீர் அகற்றப்பட்டு மொத்தமுள்ள 22 சுரங்கப் பாதைகளும் செயல்பாட்டுக்கு வந்தன. மழை வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தன. 



  • Dec 08, 2023 16:12 IST
    வேளச்சேரி கட்டிட விபத்து - 2 பேர் கைது

     

    வேளச்சேரி கட்டிட விபத்து தொடர்பாக 2 பேரை கிண்டி போலீசார் கைது செய்தனர். கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர் எழில், சந்தோஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 



  • Dec 08, 2023 15:45 IST
    திரிணாமுல் காங். எம்.பி. பதவி பறிப்பு

     

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மொஹூவா மொய்த்ராவை, எம்.பி பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. நாடாளுமன்ற நெறிமுறை குழுவின் அறிக்கையை ஏற்று மக்களவையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    அதானி குழுமத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, மொஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

     



  • Dec 08, 2023 15:43 IST
    மழைநீர் வடிகாலுக்கு ரூ.4,000 கோடியா? - கே.என். நேரு விளக்கம்

    சென்னையில் மழைநீர் வடிகால்களுக்கு செலவிட்டபட்ட தொகை குறித்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர்  கே.என். நேரு விளக்கமளித்துள்ளார். 'மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ.4,000 கோடி அல்ல. ரூ. 5166 கோடி ஆகும். அதில் இதுவரை ரூ. 2191 கோடி மதிப்பீட்டளவிலான பணிகள் மட்டுமே நிறைவடைந்துளளது' என்று கூறியுள்ளார். 



  • Dec 08, 2023 14:00 IST
    வேளச்சேரி விபத்து: மேலும் ஒரு சடலம் மீ ட்பு

    சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு டிச.4ஆம் தேதி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த 8 பேரில், 6 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர் பள்ளத்தில் சிக்கியவர்களில் ஒருவரின் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.  மேலும் ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், உடல் அடையாளம் காணப்பட்டதாக தகவல்



  • Dec 08, 2023 13:50 IST
    செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால் கூடுதலாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை



  • Dec 08, 2023 13:45 IST
    சென்னை பல்கலைக்கழகம்: ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு

    மிக்ஜாம்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு. மேலும் விவரங்களுக்கு unom.ac.in இணையதளத்தை காணலாம்



  • Dec 08, 2023 13:42 IST
    சென்னையில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விடவும் கூடுதலாக 50% பெய்துள்ளது

    சென்னையில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விடவும் கூடுதலாக 50% பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் "வடகிழக்கு பருவமழை காலமான அக்.1 முதல் இன்று வரை சென்னையில் 718.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்க வேண்டும்" "சென்னையில் 1078.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது .  இது இயல்பில் இருந்து 50% அதிகம். 



  • Dec 08, 2023 13:08 IST
    கலைஞர் 100' விழா ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    சென்னை, சேப்பாக்கத்தில் திரை கலைஞர்களால் டிச.24ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த `கலைஞர் 100' விழா ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு. கலைஞர் 100’ விழா ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு



  • Dec 08, 2023 13:02 IST
    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 3 கோடி வழங்கியது டிவிஎஸ் நிறுவனம்

    மிக்ஜாம்' புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 3 கோடி வழங்கியது டிவிஎஸ் நிறுவனம். டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காசோலையை வழங்கினார்



  • Dec 08, 2023 12:29 IST
    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்

    மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு



  • Dec 08, 2023 12:25 IST
    புயல்: நிவாரண பொருட்களை உரிய முறையில் அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ் குழு

    புயல் நிவாரண பொருட்களை உரிய முறையில் அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 73977 66651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். 



  • Dec 08, 2023 11:17 IST
    கட்டுமான நிறுவனம் என்ன பணிகளை இங்கே மேற்கொண்டு வந்தது என்பது பற்றி விசாரணை

    சென்னை வேளச்சேரியில் பள்ளத்தில் சிக்கி தொழிலாளிகள் உயிரிழந்த விவகாரம் - மாநகாட்சி ஆணையர் சம்பவ இடத்தில் ஆய்வு . கட்டுமான நிறுவனம் என்ன பணிகளை இங்கே மேற்கொண்டு வந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது. இதனை அடுத்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மண் சரிவு இருப்பதால் மீட்பு பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது. முதலமைச்சர் தினசரியும் மீட்பு பணிகள் குறித்து விசாரிக்கிறார்"



  • Dec 08, 2023 11:16 IST
    வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு

    புயல் வெள்ள பாதிப்பால் 4 நாட்கள் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு .புயலில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் இடிந்த நிலையில், மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன தேங்கிய மழைநீர் அகற்றப்பட்ட நிலையில், கூண்டில் அடைக்கப்பட்டிந்த சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வெளியே விடப்பட்டுள்ளது.



  • Dec 08, 2023 10:32 IST
    வாடிக்கையாளர்களுக்கு உதவும் TVS நிறுவனம்!

    Credit: Sun News twitter



  • Dec 08, 2023 10:24 IST
    என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன்- மு.க.ஸ்டாலின் அறிக்கை

    மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன்.  அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்- மு.க.ஸ்டாலின் அறிக்கை



  • Dec 08, 2023 10:06 IST
    சென்னையில் நேற்று 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

    Credit: Sun News Twitter



  • Dec 08, 2023 09:25 IST
    மக்களுக்கு உதவுவது தான் இப்போது முக்கியம்- கமல்ஹாசன்

    இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறைசொல்லிக் கொண்டிருப்பதே விட இறங்கி வேலை செய்ய வேண்டியது நமது கடமை. மக்களுக்கு உதவுவது தான் இப்போது முக்கியம். காலைநிலை மாற்றம் என்பது உலகம் முழுக்க நிகழும் ஒன்று.



  • Dec 08, 2023 08:42 IST
    பால் விற்பனை பழைய நிலைக்கு சீரானது- மனோ தங்கராஜ்

    மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பால் விற்பனை பழைய நிலைக்கு சீரானது. நேற்று அதிகபட்சமாக 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர் என மழையால் பாதிக்கப்பட்ட பால் உற்பத்தில் நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது- அமைச்சர் மனோ தங்கராஜ்



  • Dec 08, 2023 08:39 IST
    அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு



  • Dec 08, 2023 08:37 IST
    செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு

    செங்கல்பட்டில் இன்று காலை 7.30 மணி அளவில் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வகம் அதிகாரப்பூர்வ தகவல்



  • Dec 08, 2023 08:03 IST
    5 நாட்களுக்கு பிறகு தொழிலாளி உடல் மீட்பு

    Credit: Sun News Twitter



  • Dec 08, 2023 07:48 IST
    சென்னை ஏரிகளின் இன்றைய நிலவரம்

    புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரிநீர் திறப்பு.

    ஏரியில் நீர் இருப்பு 3054 மில்லியன் கனஅடியாக உள்ளது ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 640 கனஅடியாக சரிவு.

    சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்.

    சோழவரம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி உபரிநீர் திறப்பு. நீர் இருப்பு 884 மில்லியன் கனஅடியாக உள்ளது

    நீர்வரத்து இன்று 800 கனஅடியாக சரிவு



  • Dec 08, 2023 07:47 IST
    செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2500 கன அடி உபரி நீர் வெளியேற்றம்.

    நீர்மட்டம் 23.18 அடியாக உள்ளது.



  • Dec 08, 2023 07:47 IST
    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

    சென்னை கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், செனாய்  நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.



  • Dec 08, 2023 07:47 IST
    சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு - 92.11%

    5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 10.830 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் - 94%

    புழல் - 92.54%

    பூண்டி - 91.8%

    சோழவரம் - 81.78%

    கண்ணன்கோட்டை - 100%



  • Dec 08, 2023 07:46 IST
    15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராதாபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Dec 08, 2023 07:46 IST
    தலைமை செயலாளர் நம்பிக்கை

    சென்னையில் இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் இயல்பு நிலைக்கு திரும்பும். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் நம்பிக்கை



  • Dec 08, 2023 07:45 IST
    பொதுமக்கள் வலியுறுத்தல்

    வடசென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடியாததால் பாதிப்பு தொடர்கிறது. தண்ணீர் அகற்றும் பணிகளை தீவிரப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்



  • Dec 08, 2023 07:45 IST
    வழக்கம்போல புறநகர் ரயில்கள் இயங்கும்

    சென்னை - கும்மிடிப்பூண்டி -  சூளூர்பேட்டை வழித்தடத்தில் இன்று முதல் வழக்கம்போல புறநகர் ரயில்கள் இயங்கும்



  • Dec 08, 2023 07:45 IST
    4 மாவட்டங்களில் இன்று ரேஷன் கடைகள் திறப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் இன்று (டிச. 08) பணி நாளாக அறிவிப்பு



  • Dec 08, 2023 07:44 IST
    இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    சென்னையில் இன்றும் (டிச.8) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.8) விடுமுறை அறிவிப்பு!

    செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை                                                                                                                       



  • Dec 08, 2023 07:43 IST
    துரை முருகன் பேட்டி

    பருவ மழைக் காலங்களில் உபரி நீரை முழுவதும் கடலில் திறப்பதை தடுக்கும் வகையில், பூண்டி அருகே ராமஞ்சேரி, திருக்கண்டலம் பகுதியில் பெரிய இரு ஏரிகள் அமைக்க திட்டம் உள்ளது.

    அங்கு வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், கூடுதல் இழப்பீடு அளித்து, அந்த திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சரிடம் கூறியுள்ளேன். பருவ மழைக்கால பாதிப்புகளை தடுக்க இந்த இரு ஏரிகள் உருவாக வேண்டும்- வியாழக்கிழமை புழல் ஏரியை ஆய்வு செய்த நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேட்டி



  • Dec 08, 2023 07:43 IST
    செமஸ்டர் தேர்வு தேதி புதிய அட்டவணை

    'மிக்ஜாம்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. டிச.11ம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 17ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு



Chennai Rain Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment