Advertisment

புழல் ஏரியால் மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை-ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் பெய்த கனமழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அதிகளவிலான உபரி நீர் திறந்து விடப்பட்டது.

author-image
WebDesk
New Update
Chennai puzhal lake

Chennai puzhal lake

சென்னை புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கரைகளில் தண்ணீர் வழிந்தோடிய நிலையில் கரையின் ஒரு பகுதியில் தடுப்பு சுவர் சரிந்து விழுந்ததால், கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

Advertisment

திருவள்ளூர் அருகே பொன்னேரி பகுதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 21.20 அடி. முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும்.

வடகிழக்கு பருவமழையினால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் புழல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் பெய்த கனமழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அதிகளவிலான உபரி நீர் திறந்து விடப்பட்டது.

தற்போது புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கரைகளில் தண்ணீர் வழிந்தோடிய நிலையில் கரையின் ஒரு பகுதியில் தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது. இதனால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

எனவே நீர்வளத் துறை அதிகாரிகள் விரைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் புழல் ஏரியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’புழல் ஏரியில் பெரிய விரிசல் ஏற்பட்டதை போல செய்தி வெளியிட்டு இருந்தார்கள், அதைப் படித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே என்னை அழைத்து, நேராக அங்கு சென்று நிலைமையை அறிந்து வாருங்கள் என்று சொன்னார்கள்.

நான் வருவதற்கு முன்னே என்னுடைய இலாகா செயலாளர்களும், பொறியாளர்களும் இங்கு இருந்தார்கள். அவர்களிடம் நான் பேசினேன். இந்த உடைப்புக்கும், நீருக்கும் சம்பந்தம் இல்லை.

எந்த விதத்திலும் மக்களுக்கு ஆபத்து இருக்காது. நீர்மட்டத்தை சரியாக நாங்கள் கையாள்கிறோம். புழல் மட்டுமல்ல, மற்ற ஏரி பகுதிகளிலும் ஆபத்து இல்லாமல் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை’, என்று கூறினார்.

இந்நிலையில் புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது. மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடைய தேவையில்லை என கொசஸ்தலையாறு வடிநில கோட்டம், செயற்பொறியாளர் நீவது தெரித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை

puzhal lake

இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,500 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது.  

24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 23.45 அடியாகவும், கொள்ளளவு 3,473 மி.கன அடியாகவும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment