சென்னை வெள்ளத்தில் தனது குடும்பத்தினரை மீட்கும்போது முதலமைச்சரின் கான்வாய்க்கு வழிவிட வேண்டும் என்று கேட்டதாகவும் கவர்மெண்ட் எங்கே இருக்கு என்று கேள்வி எழுப்பி நடிகை அதிதி பாலன் முதலமைச்சர் ஸ்டாலின் அரசை சாடியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகள் மழைநீர் சூழ்ந்தது. இதனால், வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்பு படையினர் படகுகளில் சென்று மீட்டனர். தமிழக அரசு மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்படவில்லை, நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை, மழை நின்றபின் 2 நாட்களுக்கு மேலாக தவித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், நடிகை அதிதி பாலன், சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய தனது குடும்பத்தினரை மீட்கும்போது, முதலமைச்சரின் கான்வாய்க்கு வழிவிட கேட்டார்கள் என்றும் அரசாங்கம் எங்கே இருக்கு என்று மு.க. ஸ்டாலின் அரசை சாடியுள்ளார்.
— Aditi Balan (@AditiBalan) December 5, 2023
சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தனது குடும்பத்தை மீட்கும் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கான்வாய்க்கு வழிவிடுமாறு கேட்டதாக நடிகை அதிதி பாலன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து நடிகை அதிதி பாலன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், அரசாங்கம் செல்வாக்கு மிக்க பெண்ணுக்கு உதவுவதாகவும், சாதாரண மக்களை மீட்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
“சென்னை வெள்ளத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் வழியாக நடந்து செல்லும் குடும்பத்தை அழைத்துச் செல்லக் காத்திருக்கும் போது, முதல்வர் கான்வாய் நெருங்கி வருவதால், எனது காரை நகர்த்தும்படி என்னிடம் கேட்கப்பட்டது” என்று அதிதி பாலான் செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளார்.
Govt, where are you?
— Aditi Balan (@AditiBalan) December 5, 2023
I just went to Radhakrishnan nagar, Thiruvamiyur . Water from surrounding areas have been pumped into this area. There were dead animals floating around. pic.twitter.com/hy2C3eWYBQ
நடிகை அதிதி பாலன் மற்றொரு பதிவில், “அரசாங்கம் எங்கே இருக்கு? நான் திருவாமியூர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதிக்கு இப்போதான் போயிருந்தேன். சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அங்கே தேங்கிய மழைநீரில் இறந்து கிடந்த விலங்குகள் மிதந்துகொண்டிருந்தன. 2 குழந்தைகளையும், பாட்டியையும் மீட்க, மழைநீர் தேங்கியுள்ள பகுதி முழுவதும் நடந்து செல்ல வேண்டியிருந்தது. இதற்கிடையில், செல்வாக்கு மிக்க ஒரு பெண்ணை அழைத்துச் செல்ல 6 காவலர்களுடன் ஒரு படகு கோட்டூர் புரத்தில் உள்ள ரிவர் வியூ சாலையில் சென்றது” என்று மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அதிதி பாலன் புதன்கிழமை பதிவில், ராதாகிருஷ்ணன் நகரில் "எதுவும் மாறவில்லை" என்றும், மக்கள் இன்னும் அங்கு சிக்கித் தவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், “சென்னை மாநகராட்சியில் இருந்து ஏன் யாரும் அங்கே இருப்பவர்களை அணுகவில்லை” என்று அதிதி பாலன் கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.