Advertisment

தொடர் சர்ச்சை: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு

சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்ட ஃபார்முலா கார் பந்தயத்தை ஒத்திவைப்பதாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

author-image
WebDesk
New Update
Farmula car race

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் பெருவெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வரும் நிலையில், சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்ட ஃபார்முலா கார் பந்தயத்தை ஒத்திவைப்பதாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

Advertisment

சென்னையில் ஃபார்முலா 4 நைட் ஸ்ட்ரீட் ரேஸ் கார் பந்தயத்திற்கான சுற்று, கொடிப் பணியாளர் சாலை வழியாகச் சென்று, பின்னர் காமராஜர் சாலையின் ஒரு பகுதி நேப்பியர் பாலம் வழியாகச் சென்று சிவானந்தம் சாலையில் ஒரு திருப்பத்தை எடுத்து அண்ணாசாலையின் ஒரு பகுதியைச் சேர்த்து, பின்னர் மீண்டும் கொடிப் பணியாளர் சாலையுடன் இணைக்கப்படும். பந்தயத்திற்கான நிறுத்தங்கள் தீவுத்திடல் மைதானத்திற்குள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த ஃபார்முலா கார் பந்தயம் டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

சென்னையில் தீவுத் திடல் மைதானத்தைச் சுற்றி கொடிப் பணியாளர் சாலை, காமராஜர் சாலை, சிவானந்தம் சாலை மற்றும் அண்ணாசாலை ஆகியவற்றை உள்ளடக்கிய 3.7 கிமீ  தொலைவு ஃபார்முலா கார் தெரு பந்தயம் தயாரானது. 

முன்னதாக, ஃபார்முலா கார் 4 இரவு வீதிப் பந்தயத்தை நடத்துவதற்காக சாலை விரிவாக்கம் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு ரூ. 42 கோடி செலவழிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தி.மு.க அரசை கடுமையாகச் சாடினார். 

அம்மா உணவகத்துக்கு நிதி ஒதுக்காத தி.மு.க அரசு, சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்துவதற்கு ரூ.42 கோடி ஒதுக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். 

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்கபூர்வாலா தலைமையிலான முதன்மை அமர்வு, சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 நைட் ஸ்ட்ரீட் ரேஸ் கார் பந்தயம் நடத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மூன்று பொதுநல வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான மூன்றாவது அமர்வுக்கு பரிந்துரைத்தது.

இந்த மனுக்கள் டிசம்பர் 1-ம் தேதி பட்டியலிடப்பட்டபோது, நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு, கார் பந்தயத்தை நடத்துவதற்கு தமிழக அரசுக்கும், தனியார் நிறுவனமான ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அழைப்பு விடுத்தது.

சென்னையில் தீவுத் திடலைச் சுற்றியுள்ள பொதுச் சாலைகளில் அமைக்கப்படும் மெட்ராஸ் ஸ்ட்ரீட் ரேஸ் சுற்றுப் பாதையில் தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு ஸ்பான்சர்ஷிப்கள், ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் பலவற்றின் மூலம் மாநில அரசுக்கு வருமானம் கிடைக்குமா என்பதை நீதிபதிகள் தெரிந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் கார் பந்தயம் நடத்தும் முடிவு குறித்து தி.மு.க அரசை கடுமையாகச் சாடினார். ஃபார்முலா 4 நைட் ஸ்ட்ரீட் ரேஸ் கார் பந்தம் நடத்துவதற்காக ரூ. 42 கோடி செலவில் சாலை விரிவாக்கம் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு அரசு முடிவு செய்துள்ளதாக பழனிசாமி கூறினார். 

“ஏற்கனவே, சென்னை இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தயம் நடத்துவதற்கான சாலை உள்ளது. தமிழக் அரசு அம்மா உணவகங்களுக்கு நிதி ஒதுக்காத நிலையில், உயர் நீதிமன்றம், பொது மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் அமைந்துள்ள சாலைகளில் கார் பந்தயத்துக்கு மாநில அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இந்த கார் பந்தயம் மேல்தட்டு மக்களால் மட்டுமே பார்க்கப்படுகிறது ஏழை மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை மழை வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், ஃபார்முலா கார் பந்தயம் நடத்துவது அவசியமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி கடுமையாகத் விமர்சித்து வந்தனர். இதனால், சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம் நடத்துவது தொடர் சர்ச்சையாகி வந்தது.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், ஃபார்முலா 4 நைட் ஸ்ட்ரீட் ரேஸ் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் பெருவெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது. மாநில அரசு போர்க்கால அடிப்படையில் முழு வீச்சில் மீடு பணிகளை மேற்கொண்டுல்ளது. இதனால், சென்னையில்  டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்ட ஃபார்முலா கார் 4 இரவு தெருப் பந்தயத்தை ஒத்திவைப்பதாக மழைக்குப் டிசம்பர் 5-ம் தேதி தமிழக அரசு அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment