பல வாரங்களுக்கு பிறகு சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 1,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 26,37,010 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 35,217ஆகவும் உள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 202 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 116 பேருக்கும், தஞ்சாவூரில் 119 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
ராமநாதபுரத்தில் 2 பேருக்கும், பெரம்பலூரில் 7 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடி மற்றும் தேனியில் 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் 6 பேருக்கும், விருதுநகரில் 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1,537 கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 25,85,244 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா பாதித்து கோயம்புத்தூரில் 5 பேரும், சேலம் மற்றும் தஞ்சாவூரில் மூன்று பேரும் உயிரிழந்தனர். சென்னை , வேலூர் மற்றும் திருப்பூர் மற்றும் திருவள்ளூரில் தலா 2 உயிரிழப்புகளும், விருதுநகர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நாமக்கல், கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,52,296 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 4,45,27,080 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மொத்தம் 4,07,738 டோஸ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்டவர்களில் 452 சுகாதாரப் பணியாளர்கள், 754 முன்கள பணியாளர்கள்,18-44 வயதுடைய 2,44,539 நபர்கள், 45-59 வயதுடைய 1,21,964 நபர்கள், 40,029 மூத்த குடிமக்கள் ஆவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil