Chennai | Garlic Price Today: நம்முடைய அன்றாட சமையலில் முக்கிய உணவுப்பொருளாக பூண்டு இருந்து வருகிறது. சைவ உணவு முதல் அசைவ உணவு வரை என அதிகளவில் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான மருத்துவ குணமிக்க இவை சித்த மருத்துவத்திலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்வதற்கு, பிற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வறட்சி மற்றும் மழை வெள்ளம் காரணமாக பூண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. புதிய விளைச்சல் வரும் வரை பூண்டின் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“