சென்னையில் வெடித்துச் சிதறிய பலூன்கள்… பதறி ஓடிய பாஜக.வினர்: வீடியோ

விபத்து நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியே இப்போது வெளியாகியுள்ளது

By: Updated: September 19, 2020, 02:36:22 PM

chennai gas balloon fire : சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவில் வைக்கப்பட்ட கேஸ் பலூன்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது.இதனால் கட்சி நிர்வாகி உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

பாஜக விவசாய அணி சார்பில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் 2000 கேஸ் பலூன்களை பறக்கவிடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒருபக்கம் ஹீலியம் கேஸ்கள் பலூன்களில் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. மறுபக்கம் பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது

இந்நிலையில் பட்டாசு பொறி பட்டு பலூன்கள் பயங்கரமாக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெடித்து சிதறின. இதனால், பாஜக விவசாய அணி துணைத் தலைவர் உள்பட பாஜகவைச் சேர்ந்த பலர் தீ காயங்களடைந்தனர்.பலூன்கள் வெடித்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நிகழ்ச்சி நடத்துவது குறித்து எந்தவொரு அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர், முத்து ராமன் உள்பட தீ காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே இந்த விபத்து நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியே இப்போது வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விழாக்கள் கொண்டாட்டங்களின்போது பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது மட்டுமே விபத்துக்களைத் தவிர்க்கும் வழி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai gas balloon fire video in modi birthday celebration bjp gas ballon fire accident

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X