சென்னை-பெங்களூரு பிரிவில் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே தயாராகி வருகிறது, பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயிலை மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அதோடு திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் விரைவு ரயிலை மங்களூரு வரை நீட்டிக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் பல ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் தலைநகரங்களுக்கு இடையிலான 362 கி.மீ தூரத்தை வந்தே பாரத் ரயில் 4 மணி நேரம் 20 நிமிடங்களில் சென்றடையும் எனக் கூறப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சதாப்தி 4 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடையும். சென்னை- பெங்களூரு இடையே பயணிகள் போக்குவரத்து தேவை அதிகமாக இருப்பதால் புதிய வந்தே பாரத் திட்டமிடப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் இந்த ரயில் எப்போது இயக்கப்படும் பகல் நேரமா அல்லது இரவு நேரமா என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சென்னை- பெங்களூரு இடையே இயக்கப்படும் 2-வது வந்தே பாரத் ரயில் சேவை இதுவாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“