மீண்டும் நீட் மோசடி: டாக்டர் மகள் சிக்கினார்

Neet 2020 Scorecard 610 மதிப்பெண்கள் பெற்றிருப்பதைக் காட்டி, போலி ஸ்கோர்கார்டுடன் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்ததாகத் தெரியவந்தது.

Chennai Girl Forges Neet Scorecard to get Medical Seat Tamil News
Chennai Girl Forges Neet Scorecard to get Medical Seat

Duplicate Neet Scorecard to secure Medical Seat Tamil News : கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் ஏராளமாக எழுந்துள்ளன. அதில் தற்போது நீட் மதிப்பெண் அட்டை முறைகேடு சேர்ந்திருக்கிறது. நீட்தேர்வில் பெற்ற 27 மதிப்பெண்ணில் மோசடி செய்து அதை 610 மதிப்பெண்களாக திருத்தி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணவி மற்றும் அவரது தந்தையான பல் டாக்டர் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த என்.பி. தீக்ஷா மற்றும் அவருடைய தந்தை என்.கே.பாலசந்திரன் ஆகியோருக்கு எதிராக பெரியமேட் காவல் நிலையத்தில் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரும், தேர்வுக் குழு செயலாளருமான டாக்டர் ஜி செல்வராஜன் ஆகியவர்கள் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது.

புகாரின்படி, நவம்பர் 30-ம் தேதி, நீட்-யுஜி 2020-ல், 27 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற தீக்ஷாவும், அவரது தந்தையும் ஆலோசனை மையத்திற்குச் சென்று, தீக்ஷா 610 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் ஆலோசனைக்கு அழைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும்போது, அவர் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும், கவுன்சிலிங்கிற்குத் தகுதிபெறத் தகுதி பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் அதிகாரிகள் கண்டறிந்தனர். தீக்ஷாவின் புகைப்படம் மற்றும் ரோல் எண் இருந்த தரவரிசை பட்டியலையும் இருவரும் கொடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் நடந்த விசாரணையில், 610 மதிப்பெண்கள் பெற்றிருப்பதைக் காட்டி, போலி ஸ்கோர்கார்டுடன் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்ததாகத் தெரியவந்தது. 610 மதிப்பெண்கள் பெற்ற என்.ஹிருத்திகா என்ற மற்றொரு வேட்பாளரின் புகைப்படம் மற்றும் ரோல் எண்ணை மாற்றி, தீக்ஷா தயாரித்த ஸ்கோர்கார்டு மற்றும் தரவரிசைப் பட்டியல் போலியானது என்று தெரிய வந்ததும், இந்த விஷயத்தை ஆராய அதிகாரிகள் உள் விசாரணை நடத்தினர்.
இருப்பினும், தீக்ஷாவின் தந்தை அவர்களின் கூற்றை ஏற்கவில்லை. இதனால், மகள் தன் தந்தைக்குத் தெரியாமல் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அசல் வேட்பாளர் ஹிருத்திகா ஏற்கெனவே கவுன்சிலிங்கிற்கு ஆஜராகி மருத்துவ இடத்தை தேர்வு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பெரியமேட் காவல்துறையினர், வேட்பாளருக்கு எதிராக 419 (மோசடிக்கான தண்டனை), 464 (தவறான ஆவணங்களை உருவாக்குதல்), 465, 468 (ஃபோர்ஜரி), 471 (உண்மையானதை போலியாக பயன்படுத்துதல்) மற்றும் ஐபிசியின் 420 (மோசடி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தச் சிறுமியையும் அவருடைய தந்தையையும் விசாரிக்க ஒரு சிறப்பு குழு சென்றுள்ளது. இதற்கிடையில், முறைகேடு நடந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக நகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai girl forges neet scorecard to get medical seat tamil news

Next Story
News Highlights: ஈகோவை ஒதுக்கி விட்டு ரஜினியுடன் இணையத் தயார்- கமல்ஹாசன்kamal haasan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com