சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 15 பேர் குற்றவாளிகள் என்றும் ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கபடும் என நீதிபதி அறிவித்தார்.

chennai girl sexual harassment case, சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, chennai girl sexual harassment case judgement, POCSO Act, 15 பேர் குற்றவாளிகள், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு, 15 accused convicted, chennai girl sexual harassment
chennai girl sexual harassment case, சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, chennai girl sexual harassment case judgement, POCSO Act, 15 பேர் குற்றவாளிகள், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு, 15 accused convicted, chennai girl sexual harassment

சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 15 பேர் குற்றவாளிகள் என்றும் ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கபடும் என நீதிபதி அறிவித்தார்.

சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 12 வயதுச் சிறுமி 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்தக் குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக இருந்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களைக் குண்டர் தடுப்புக் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தில் அடைக்கபட்ட உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்த வழக்கின் விசாரணையை சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

இந்த நிலையில், மகளிர் நீதிமன்றத்திலிருந்து விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், பாலியல் குற்றச்சாட்டு வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க மகளிர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் இருந்து, வழக்கை சென்னை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கு என தொடங்கிய சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதின்றம் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டார். இதே போன்று குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் தரப்பில் தனித்தனியாக வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். மேலும் காவல்துறை தரப்பில்120 வழக்கு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் விவரங்கள்:

ரவிகுமார் (56), சுரேஷ் (32), ராஜசேகர் (48), எரால் பிராஸ் (58), அபிஷேக் (28), குமரன் (60), முருகேசன் (54), பரமசிவம் (60), ஜெய்கணேஷ் (23), பழனி (40), தீனதயாளன் (50), பாபு (36), ராஜா (32), சூர்யா (23), குணசேகரன் (55), ஜெயராமன் (26), உமாபதி (42) இவர்களில், 12 ஆவதாக குற்றம் சாட்டப்பட்ட பாபு என்பவர் விசாரணை காலத்தில் இறந்து விட்டார்.

இந்த 17 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 – பி, 366 (பாலியல் வன்கொடுமை), 376 – ஏ பி (காயமேற்படுத்துதல்), 376 பி டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) 307 (கொலை முயற்சி), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் 10 மற்றும் 12-வது பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதுதவிர, 12 வயதுக்குக் குறைவான சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தின் புதிதாக நிறைவேற்றப்பட்ட பிரிவுகளின் கீழ் ரவிகுமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகியோர்க்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த டிசம்பர் மாதம் 6-ம் தேதி முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று சனிக்கிழமை, இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளா, குற்றஞ்சாட்டப்பட்ட லிப்ட் ஆபரேட்டர் ரவிகுமார்(56), பிளம்பர் சுரேஷ்(32), வீட்டு வேலைக்காரர் ராஜசேகர்(48), காவலாளிகள் எரால்பிராஸ்(58), அபிஷேக்(28), சுகுமாரன்(60), முருகேசன்(54), லிப்ட் ஆப்ரேட்டர் பரமசிவம்(60), பிளம்பர் ஜெய்கணேஷ்(23), லிப்ட் ஆப்ரேட்டர்
பாபு(36), காவலாளி பழனி(40), லிப்ட் ஆப்ரேட்டர் தீனதயாளன்(50), பிளம்பர்கள் ராஜா(32), சூர்யா(23), தோட்டப் பணியாளர் குணசேகரன்(55), வீட்டு வேலைக்காரர் ஜெயராமன்(26), எலக்ட்ரீசியன் உமாபதி(42) 17 பேரில் பாபு மரணமடைந்து விட்டதை அடுத்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டு கைவிடபட்டது.

இதில், மீதமுள்ள 16 பேரில் ரவிக்குமார், சுரேஷ், ராஜசேகர், எரால் பிராஸ், அபிஷேக், குமரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, ஜெயராமன், உமாபதி ஆகிய 15 பேருக்கு எதிரான அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது எனவே இவர்கள் 15 பேரும் குற்றவாளிகள்.

இந்த வழக்கில் 15வது குற்றவாளியாக உள்ள குணசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபடவில்லை எனவே சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளித்து அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகள் 15 பேருக்கான தண்டனை விபரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கபடும் என நீதிபதி மஞ்சுளா அறிவித்தார்.

2018-இல் சென்னையில் சிறுமியை பலர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai girl sexual harassment case 15 accused convicted

Next Story
தந்தையால் முடியாததை சாதித்த தனயன்; திமுக திருச்சி மாவட்ட பொறுப்பாளர் ஆன அன்பில் மகேஷ்anbil mahesh, DMK Tiruchi district secretary, திமுக, அன்பில் மகேஷ், திமுக திருச்சி மாவட்ட செயலாளர், dmk Tiruchi south distirct secretary anbil mahesh, dmk, anbil poyyamozhi, திருச்சி, anbil dharmalingam, kn nehru
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express