/tamil-ie/media/media_files/uploads/2019/03/sexual-abuse..jpg)
Chennai girl sexually abused by her father
சென்னையில் 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தந்தையும், புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகியுமான ரவி கைது செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, நேற்று முன்தினம் இரவு தலையில் அடிபட்டதாக கூறி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதை கண்டறிந்தனர்.
உடனடியாக இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் மருத்துவமனை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியின் தந்தை ரவி, பெற்ற மகள் என்றும் கூட பாராமல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இவர் புதுச்சேரி புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த மாநில நிர்வாகியாக உள்ளார்.
இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் அதனை மறுத்த ரவி பின்னர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவியை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அங்கன்வாடி பணியாளர் ஆவார், இவர் புரட்சி ரவியின் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.