/indian-express-tamil/media/media_files/2025/02/12/aCxig3PAohwD3Sqw2dIf.jpg)
மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீஸ் டெல்லியை சேர்ந்த ஏற்றுமதி இறக்குமதியாளர்களையும், 3 சுங்கத்துறை அதிகாரிகளையும் அதிரடியாக கைது செய்துள்ளது.
இந்தியாவில் கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை துறைமுகம் வழியாக ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மைசூர் பருப்பு எனக் கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் உதவியதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து பச்சை பட்டாணி இறக்குமதி செய்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறை நடத்திய சோதனையில் ரூ.60 லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி 4 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) தற்போதைய கொள்கையின்படி, கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சைப் பட்டாணியை இறக்குமதி செய்ய முடியும், குறைந்தபட்ச இறக்குமதி விலை கிலோவுக்கு ரூ.200 (MIP) ஆகும். மஞ்சள் பயறு வகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அதை மைசூர் பருப்பாக தவறாக அறிவித்ததாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us