சென்னை அடையாறில் விதிமுறைகளை மீறி பல கோடி மதிப்பிலான நிலங்களுக்கு பட்டா வழங்கிய கிண்டி வருவாய் கோட்ட அலுவலர் (RDO) அருள் ஆனந்தத்தை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
மூத்த அரசு அதிகாரி, நீதிபதி மற்றும் பிறருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இந்த நிலங்களை, ஆர்.டி.ஓ அருள் ஆனந்த் வேறு ஒருவருக்கு ஒதுக்கியுள்ளார்.
இதனையடுத்து, பல கோடி மதிப்புமிக்க இந்த நிலங்களை ஒதுக்குவதில் உள்ள நடைமுறைகளை மீறியதாகக் கூறி அருள் ஆனந்த கடந்த வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. சஸ்பெண்ட் உத்தரவை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் வழங்கியது.
நில உரிமையாளர்கள், பட்டா வைத்திருக்கும் வி.வி.ஐ.பி.,க்கள் உள்ளிட்டோர் அளித்த புகாரின் பேரில், அரசு விசாரணை நடத்தி, ஆர்.டி.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது.
“சில வகை நிலங்களின் உரிமையை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்ற ஆர்.டி.ஓ-க்கு அதிகாரம் இல்லை. ஆர்.டி.ஓ நில உரிமைகளுக்கான (பட்டா) விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் நில நிர்வாக ஆணையர் மூலம் மாநில அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். மாறாக, ஆர்.டி.ஓ., வேறு ஒருவருக்கு சட்டவிரோதமாக நிலத்தை ஒதுக்கியுள்ளார்,” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக, அரசு பதிவேடுகளில் 'நத்தம்' என வகைப்படுத்தப்பட்ட ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிப்பவர்களுக்கு, 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மனை பட்டா தொடர்பான பிரச்னைகளை தீர்க்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆர்.டி.ஓ.,க்களை அரசு நியமித்தது.
கடந்த சில ஆண்டுகளாக, சிட்லபாக்கம் ஏரி, தாழம்பூர், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அடையாறு ஆறு உள்ளிட்ட இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு சொத்துகள் மற்றும் நீர்நிலைகளுக்கு தனி நபர்களுக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளை வருவாய் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும், அதிகாரபூர்வ தரவுத்தளங்களில் நில வகைப்பாடுகளை முறைகேடு செய்த அதிகாரிகள் மற்றும் அரசு சொத்துக்களை பதிவு செய்ய தடையில்லா சான்று வழங்கிய அதிகாரிகள் இதுவரை எந்த துறை ரீதியான நடவடிக்கையையும் எதிர்கொள்ளவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“