தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதி பெற்ற ராஜகோபால்: சிகிச்சை பலனின்றி மரணம்

எனினும் சிகிச்சை பலனின்றி ஜூலை 18-ம் தேதி காலையில் ராஜகோபால் மரணம் அடைந்தார்.

saravana bhavan rajagopal, : சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்ற சிறை துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளன. எனினும் சிகிச்சை பலனின்றி ஜூலை 18-ம் தேதி காலையில் ராஜகோபால் மரணம் அடைந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவண பவன் உரிமையாளர் ராஐகோபாலின் மகன் சரவணன், தக்கல் செய்துள்ள மனுவில், 72 வயதாகும் தனது தந்தை ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சைகளை வழங்க உத்தரவிட வேண்டும்.

சர்க்கரை நோயினால் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் 72 வயதான ராஜகோபாலுக்கு தினமும் 4 முறை இன்சுலின் செலுத்த வேண்டும். “பெடல் ஒடேமா” காரணமாக இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு உதவியாளர்கள் இல்லாமல் நடக்க முடியாது. நாள்பட்ட சிறுநீரக நோயினால் கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கிருமி தொற்று காரணமாக கடந்த 2014 முதல் உதவியாளர்கள் இல்லாமல் தனியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக தனியார் மருத்துவர்கள் வழங்கிய மருந்துகளையே எடுத்து வந்த அவர் தற்போது, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மருத்துவர்களும் வழங்கும் மருந்துகளை உட்கொள்வதால் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது. போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் தனது தந்தைக்கான சரியான சிகிச்சை வழங்கபடுவதில்லை.

அதனால், தனது தந்தையை விஜயா மருத்துவமனை, எஸ்.ஆர்.எம் மருத்துவமனை அல்லது அனைத்து உபகரணங்களும் மருத்துவ உபகரணங்களும், வசதிகளும் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் சிறைதுறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம். நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜகோபாலை தனியார் மருத்துமனைக்கு அழைத்து செல்வது, சிகிச்சை அளிப்பதற்கான செலவுகளை அவருடைய மகன் பொறுப்பு என தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி சரண் அடந்து ஒரு நாள் கூட சிறை செல்லவில்லை. சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் டாக்டர் குழுவினர் போதுமான சிகிச்சை வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும் இரு முறை நெஞ்சுவலியால் பாதிக்கபட்டு வருகிறார். இதே காரணத்தை கூறி உச்சநீதிமன்றம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார்.

அப்போது மனுதரார் தரப்பில், சரண் அடைய அவகாசம் கோரிய மனு மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யபட்டுள்ளது என தெரிவித்தார்.ஸ்டான்லி மருத்துவ மனை டீன் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், தற்போது செயற்கை சுவாசம் பொறுத்தபட்டு கவலைகிடமாக உள்ளார்.அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது சிக்கலானது தெரிவிக்கபட்டது.

இந்த அறிக்கை தொடர்ந்து வாதிட்ட மனுதரார் தரப்பு வழக்கறிஞர், எந்த விதமான இடர்பாடுகளுக்கும் பொறுப்பேற்று கொள்வதாக உத்தரவாதம் அளிக்கபட்டது.

இதனையடுத்து மனுதரார் உத்தரவாதத்தை பதிவு செய்து உத்தரவிட்ட நீதிபதிகள் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளிப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை சிறை துறை பின்பற்ற வேண்டும் என தெரிவித்து வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி ஜூலை 18-ம் தேதி காலையில் ராஜகோபால் மரணம் அடைந்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close