Advertisment

இந்து அறநிலையத்துறை: செயல்படாத அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

அதிகாரிகள் கடமையைச் செய்யாமல் சம்பளம் வாங்குவதில் என்ன பயன் என சென்னை உயர் நீதிமன்றம் இந்து அறநிலையத்துறை ஆணையரைக் கேள்வி எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai HC, HR&CE department, why not restrain salary to Inactive executive officers, இந்து அறநிலையத்துறை, செயல்படாத அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது, ஐகோர்ட் கேள்வி, Madras high court, Tamilnadu

அதிகாரிகள் கடமையைச் செய்யாமல் சம்பளம் வாங்குவதில் என்ன பயன் என சென்னை உயர் நீதிமன்றம் இந்து அறநிலையத்துறையைக் கேள்வி எழுப்பியதுடன், கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வரை, செயல்படாத அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது என எச்சரித்தது.

Advertisment

சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற கோவில் நில ஆக்கிரமிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்காததற்காக உயர்நீதிமன்றம் இந்து அறநிலையத்துறையை கண்டித்து, “அரசு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும். ஆனால், முதலில் ஏன் அதை ஆக்கிரமிக்க அனுமதித்தது. இதற்கு ஏன் ஒரே ஒரு அதிகாரிகூட பொறுப்புக் கூறவில்லை.” என்று கேள்வி எழுப்பியது.

மேலும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம், கடந்த 2013ம் ஆண்டு முதல் கோவில் விவகாரங்களை நிர்வகிக்கும் நிர்வாக அலுவலர்களின் (இ.ஓ) பட்டியலை அளிக்குமாறு இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. “நிர்வாகம் செய்யும் நிர்வாக அலுவலர்களின் செயலற்ற தன்மையால், 2013ல் இருந்து காளான்கள் போல் தோன்றிய ஆக்கிரமிப்புகள், தற்போது கோவில் நிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. இ.ஓ.-க்கள் நடவடிக்கை எடுக்காததால், கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. கோயில் நிர்வாக அதிகாரிகளின் இந்த வகையான நிர்வாகத்தை ஏற்க முடியாது. அவர்கள் தரப்பில் ஏதேனும் தவறு இருந்தால், அது குறித்து இந்து அறைலையத்துறை ஆணையரால் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த தேதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ விசாரணையைத் தொடங்க நாங்கள் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை நீதிமன்றம் கூறியது.

“இந்து அறநிலையத்துறை ஆணையர் தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் விவகாரங்களைக் கண்காணிக்க வேண்டிய பணியில் உள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கையில் தவறு கண்டறியப்பட்டால், அந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்நிலை அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், தோல்வி ஏற்படும். கோவிலின் அலுவல்களை தவறாக நிர்வகிப்பதில் ஆணையரின் ஒரு பகுதி விளைவும் உள்ளது” என்று நீதிமன்றம் கூறியது.

நடவடிக்கைகள் எடுக்காமல் ஆக்கிரமிப்பை ஊக்குவித்தது கோயில் நிர்வாகம் தான் என்றும் கோயில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய நிர்வாக அலுவலர்கள், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோத்து செயல்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடமையைச் செய்வதற்குதான் நிர்வாக அலுவலருக்கும், ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதே தவிர, ஏசி அறையில் இருப்பதற்காக அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், செயல்படாத இவர்களின் ஊதியத்தை ஏன் பிடிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத செயல் அலுவலரை உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளின் விவரங்களும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Tamilnadu Hindu Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment