பன்னா இஸ்மாயிலுக்கு மூன்று நாட்கள் பரோல்!

பன்னா இஸ்மாயிலுக்கு மூன்று நாட்கள் பரோல் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

By: Published: March 20, 2018, 6:28:45 PM

தந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, பன்னா இஸ்மாயிலுக்கு மூன்று நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயற்சித்தது, இந்து அமைப்புகளின் நிர்வாகிகளை கொலை செய்த வழக்குகளில் தொடர்புடைய பன்னா இஸ்மாயில், 2013ல் ஆந்திராவில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது தந்தை முகமது அப்துல்லா, நெல்லை, பாளையங்கோட்டை மருத்துவமனையில் நேற்று மரணமடைந்தார். மேலப்பாளையத்தில் நடக்க உள்ள அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க பன்னா இஸ்மாயிலுக்கு பரோல் வழங்க கோரி அவரது நண்பர் காதர் மைதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பன்னா இஸ்மாயிலுக்கு பரோல் வழங்க கோரி சிறை கண்காணிப்பாளருக்கு மனு அளித்த போது, விசாரணை கைதிக்கு பரோல் வழங்க தனக்கு அதிகாரம் இல்லை என அவர் தெரிவித்ததாக, மனுவில் காதர் மைதீன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, பன்னா இஸ்மாயிலுக்கு மூன்று நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chennai hc granted 3 days parole for panna ismail

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X