Advertisment

சென்னையில் 3.45 ஏக்கர் அரசு நிலத்தை ஷாப்பிங் மாலுக்கு ஒதுக்கிய அ.தி.மு.க அரசு;  ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மாநிலம் முழுவதும் உள்ள உயர் மதிப்புள்ள அரசு சொத்துகளை அபகரிக்க காரணமான அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எதிராக கிரிமினல் வழக்குத் தொடருமாறு மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
ss

சென்னையில் 3.45 ஏக்கர் அரசு நிலத்தை ஷாப்பிங் மாலுக்கு ஒதுக்கிய அ.தி.மு.க அரசு;  ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அ.தி.மு.க அரசு 3.45 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் வணிக வளாகத்திற்கு ஒதுக்கியதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிர்ச்சி தெரிவித்துள்ளர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், மாநிலம் முழுவதும் அதிக மதிப்புள்ள அரசு சொத்துக்களை அபகரித்ததற்கு  காரணமான அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எதிராக கிரிமினல் வழக்குத் தொடர உத்தரவிட்டு, ஒரு சிறப்பு சட்டம் இயற்ற பரிந்துரைத்தார்.

Advertisment



அப்போதைய அ.தி.மு.க அரசு, சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே அரசு புறம்போக்கு கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட 3.45 ஏக்கர் நிலத்தை, பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வணிக வளாகம் கட்ட ஒதுக்கியது.

சென்னை கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் அருகே 3.45 ஏக்கர் அரசு நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஷாப்பிங் மால் கட்டுவதற்காக ஒதுக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சென்னை உயர்நீதிமன்றம், ஓட்டல் சரவண பவனிடம் இருந்து நிலத்தின் உரிமையை முடக்கி வைக்க திங்கள்கிழமை அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அதிக மதிப்புள்ள அரசு சொத்துகளை அபகரிக்க காரணமான அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எதிராக கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்,  “அரசு நிலங்களை அபகரிக்கும் விவகாரத்தில் உள்ள கட்டமைப்பு ஊழல்களைக் கண்டறிந்து, இத்தகைய குற்றங்களைச் சமாளிக்க உரிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு” அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், அரசு நிலங்களை அபகரித்தல், குத்தகைக்கு வாடகை செலுத்தாமல் இருப்பது, அரசு நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்தல் போன்ற சட்ட விரோத செயல்களைக் கண்டறிந்து குற்றவியல் வழக்கு உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுக்க உயர்மட்டக் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டார்.

10.50 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகம் கட்டப்படவிருந்த இடத்தில், 3.45 ஏக்கர் நிலம் உண்மையில் கிராம நத்தம் (குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொதுவான கிராம நிலம்) என வருவாய் பதிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கூறினார். இருப்பினும், 1983-ம் ஆண்டில், ஒரு தாசில்தார் கிராம நத்தம் முதல் ரயோத்வாரி வரை நிலத்தை மறுவகைப்படுத்தியதை அடுத்து, 1994-ல் ஹோட்டல் சரவண பவன் அதை அருகிலுள்ள 5.80 ஏக்கர் தனியார் சொத்துடன் வாங்கியது.

அதன்பிறகு, 3.45 ஏக்கருக்கு பட்டா வழங்குமாறு சரவண பவன் ஹோட்டல் முன்வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. ஏனெனில், நில நிர்வாக ஆணையர் அதை மீண்டும் அரசு புறம்போக்கு கிராம நத்தம் என மீண்டும் வகைப்படுத்தினார். 2005-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் சகாயம் அந்த நிலத்தை ஆய்வு செய்து ஓட்டல் சரவண பவன் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதாக அறிவித்து, சென்னையின் மையப்பகுதியில் உள்ள மதிப்புமிக்க சொத்தில் இருந்து அந்த ஹோட்டலின் பெயர் பலகையை அகற்ற உத்தரவிட்டார்.

“செல்வாக்கு மிக்க செல்வந்தர்களின் இந்த வெளிப்படையான நில அபகரிப்புச் செயலை வருவாய்த்துறை நிர்வாகம் வாய்மூடிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விலைமதிப்புள்ள நிலத்தை எப்படியும் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும்... சென்னை மாவட்டத்தில் அரசு நிலம் மிகவும் அரிதாகி வருகிறது. பாதுகாப்பிற்காக தடை உத்தரவு புத்தகத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும், மேலும், அரசின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சென்னை மாவட்டத்தில் நில வங்கியை உருவாக்குவது மிகவும் இன்றியமையாதது” என்று அப்போது மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த சகாயம் எழுதியிருந்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த சகாயம் காட்டிய துணிச்சலையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டிய நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், ஷாப்பிங் மால் கட்டுவதற்காக 3.45 ஏக்கரை 2021 பிப்ரவரி 8 அன்று பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 1,575 கோடி முதலீட்டில் ஒப்படைத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  வணிக வளாகம் அமைந்தால் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்ற அடிப்படையில் இந்த நிலம் ஒதுக்கப்பட்டது, ரியல் எஸ்டேட்காரர் ஒரு சதுர அடிக்கு ரூ. 12,500 வீதம் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதைக் கண்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு நிலம் ஒதுக்கப்பட்டதைக் கவனித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், வணிக வளாகம் கட்டுவது அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் தரும் வணிகச் செயல்பாடு என்றும், எனவே மதிப்புமிக்க அரசு நிலத்தை பொது நல நோக்கத்திற்காக என்று குறிப்பிட்டு ஒதுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். இந்த நிலம் ஒதுக்கப்பட்டதற்கு பின்னால், சில புறம்பான கருத்துக்கள் காரணமாக இருக்கிறது என்று நீதிபதி கூறினார்.

அரசு சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், 3.45 ஏக்கர் ரியல் எஸ்டேட்டருக்கு ஒதுக்கப்பட்ட 2021 அரசாணையை ரத்து செய்து 2022 நவம்பர் 4 அன்று மற்றொரு அரசாணையை பிறப்பித்ததாக தற்போதைய அரசாங்கத்தின் மனுவை பதிவு செய்தார். மேலும், அரசு சொத்துக்கு வேலி அமைத்துள்ளதாக கூடுதல் அரசு வழக்கறிஞர் டி. அருண் குமார் உதவி கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர். ராமன்லால் மனுதாக்கல் செய்ததையும் அவர் பதிவு செய்தார்.

ஹோட்டல் சரவணபவன் 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு விசாரணையின் போது 2021 அரசாணையை எதிர்த்து ஹோட்டல் நிலத்திற்கு பட்டா பெற உரிமை உண்டு, எனவே ஒதுக்கீடு குறித்து கேள்வி எழாது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், நீதிபதி இந்த வாதத்தை ஏற்கவில்லை. மேலும், அந்த ஹோட்டல் அடிப்படையில், அரசாங்க நிலத்தை முறையான முறையில், அதிலும் குறிப்பாக அரசு அதிகாரிகளின் அனுசரணையுடன் அநியாயமாக ஆதாயங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என்று  நீதிபதி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment