தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ரூ.6.97 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்தும்படி, ஜி.எஸ்.டி கூடுதல் இயக்குனர் பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் உற்பத்தி, பகிர்மானம், கொள்முதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து உத்தரவுகளை பிறப்பிக்கிறது. அதன்படி, கடந்த 2017 முதல் 2023 வரை வசூலிக்கப்பட்ட இந்த கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியாக ரூ. 6.97 கோடி செலுத்தும்படி ஜி.எஸ்.டி. கூடுதல் இயக்குனர், மே 6-ம் தேதி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரியும், மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ரூ.6.97 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்தும்படி, ஜி.எஸ்.டி கூடுதல் இயக்குனர் பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“