Advertisment

கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பஸ்களுக்கு வரி வசூலிக்க முடியாது - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
chennai hc omni buses

கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (அக்டோபர் 17) தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிராக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய காலத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 50 சதவீத பயணிகளுடனும், 2021 அக்டோபர் முதல் 100 சதவீத பயணிகளுடனும் பேருந்துகளை இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.

இருப்பினும், பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டாததால் 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரையிலான 5 காலாண்டுகளுக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை என அறிக்கை அளித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க கூடாது என தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால், இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிராகரித்தது. 

இதை எதிர்த்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கொரோனா காலத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்காத உரிமையாளர்கள் இழப்பை சந்தித்திருப்பதாகவும் 2021 அக்டோபர் முதல் 2022-ம் ஆண்டு டிசம்பர் வரை ஆம்னி பேருந்துகள் பொது சாலையில் இயக்கப்படவில்லை என்பதால், அந்த பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பவர் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து அளித்த அறிக்கையை நிராகரித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இயக்கப்படாத பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment