நடிகைகள் பற்றி அவதூறு... தி.மு.க பேச்சாளருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு | Indian Express Tamil

நடிகைகள் பற்றி அவதூறு… தி.மு.க பேச்சாளருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஹச் டாக் மாதிரி இருக்கிறார் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்மன் படத்தில் வரும் ஜண்டா மாதிரி இருக்கிறார்

நடிகைகள் பற்றி அவதூறு… தி.மு.க பேச்சாளருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

பொதுக்கூட்டத்தில் அவதூராக பேசிய திமுக பேச்சாளா சைதை சாதிக் இனி பெண்கள் குறித்து அவதூராக பேச மாட்டேன் என்று பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திமுக விழாவில், அமைச்சர் மானோ தங்கராஜ், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவினர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக அக்கட்சியின் பெண நிர்வாகிகளான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து தகாத வார்த்தகளால் விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஹச் டாக் மாதிரி இருக்கிறார் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்மன் படத்தில் வரும் ஜண்டா மாதிரி இருக்கிறார் என்று கூறிய சைதை சாதிக், இவர்கள் இருவருமே எந்த நல்லதும் செய்யவில்லை என்று பேசினார். தொடர்ந்து நடிகைகள் குறித்து பேசிய அவர் கடுமையாக ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.

சைதை சாதிக்கின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில, பல தரப்பினரும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தவது அவர்கள் எந்த மாதிரியான சூழலில் வளர்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆண்கள் தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இதுதான் முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

குஷ்புவின் டவிட் ரீ-ட்விட் செய்திருந்த திமுக எம்பி கனிமொழி, ஒரு பெண்ணாகவும், மனிதநேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார். இதனிடையே சைதை சாதிக் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்ட்டது. ஆனால் இந்த வழக்கில் முன்ஜாமீன்கோரி சாதிக் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பெண்கள் குறித்து அவதூரான கருத்துக்களை தெரிவித்திருப்பதால், இனிமேல் இது போன்று பேசமாட்டேன் என்று பிரமான மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பா சைதை சாதிக்கை கைது செய்ய கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வழக்கை நவம்பர் 29-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai hc ordered to dmk speaker saidai sadiq apology for speak about actress