வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 15) கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முதலே சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மணலி, புளியந்தோப்பு, ஓ.எம்.ஆர் சாலை, துரைப்பாக்கம், கந்தன் சாவடி ஆகிய ஆகிய இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலை மழைநீரில் மூழ்கியதால் ஓ.எம்.ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் மழை நீர் தேங்கியதால் சென்னையில் 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்துக் காவல் துறை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இன்று (15.10.2024) சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு சென்னை பெருநகரப் போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
1. மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள்
1.பெரம்பூர் ரயில்வே
2.கணேசபுரம் சுரங்கப்பாதை
3.சுந்தரம் பாயிண்ட் சுரங்கப்பாதை
4.துரைசாமி சுரங்கப்பாதை
5.மேட்லி சுரங்கப்பாதை
2.மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன.
1.தானா தெரு
2.வெலிங்டன் முதல் டேம்ஸ் ரோடு
3.சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் சந்திப்பு
4.டேங்க் பங்க் ரோடு
5.ஸ்டெர்லிங் சாலை
6.பெரியார் பாதை முதல் நெற்குன்றம் பாதை. வடபழனி
7.நீலாங்கரை சந்திப்பு முதல் நீலாங்கரை பி.எஸ்
8.அண்ணா சாலை முதல் எம்.ஜி.ஆர் சாலை வரை
9.பிராட்வே சந்திப்பு
10.பிரகாசம் சாலை
11.ஹைத் மஹால்
12.மண்ணடி மெட்ரோ
13.புளு ஸ்டார் சந்திப்பு
14.சிந்தாமணி
15.ஐயப்பன் கோயில்
16.நெற்குன்றம் ரயில் நகர் நோக்கி எச்.பி பெட்ரோல் பங்க் 200 மீட்டர் சாலைக்கு அருகில்
17.மேட்டுக்குளம் முதல் தியணைப்பு நிலையம் வரை
18.பட்டுலாஸ் சாலை
19.ஹபிலிஸ் ஹோட்டல்
20.பால் வெல்ஸ் சாலை
ஆகிய சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்வதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“