சென்னையில் நேற்று இரவில் பெய்த பலத்த கனமழையால், 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிபட்டனர்.
சென்னையில் நேற்று இரவு அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராஜ நகர், வடபழனி, சிந்தாதரிபேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கனமழையால் 31 விமான சேவை பாதிப்பால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சூறைக்காற்று, வீசுயதால் தரையிறங்க முடியாமல் 4 விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. 15க்கும் மேற்பட்ட விமானங்கள் வானில் திறையிறங்காமல் வானில் பறந்தது. சென்னையில் புறப்பட வேண்டிய 16 விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.