Advertisment

மது போதையில் நடக்கும் குற்றங்களுக்கு ஏன் மாநில அரசை பொறுப்பாக்கக் கூடாது? - ஐகோர்ட்

47% ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பதாகவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Latest political news live updates

Latest political news live updates

மது போதையில் நடக்கும் குற்றங்களுக்கு ஏன் மாநில அரசை பொறுப்பாக்கக் கூடாது என்பது குறித்து ஏப்ரல் 4க்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கௌதமன், குருசாமி இரண்டு பேர் தற்கொலை செய்த வழக்கில் கோவையை வீராசாமி உட்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழககில்இ ருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

மேலும், தன்னுடைய உத்தரவில், தமிழகத்தின் ஒட்டுமொத்த மது விற்பனையும் தமிழக அரசே மேற்கொள்வதாகவும், சொந்த மக்களுக்கு மதுபானத்தை மாநில அரசு விற்பனை செய்வதன் மூலம், ஆண்டுக்கு 31,757 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாகவும், தமிழக அரசின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையால் கிடைப்பது என்பது துரதிருஷ்டவசமானது என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

தேசிய சுகாதார பணிகள் துறை ஆய்வுபடி, 47% ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பதாகவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிபோதையில் விபத்துக்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த நீதிபதி, மது கொள்கையில் தமிழக அரசு மாற்றங்களை கொண்டு வராவிட்டால், இந்த குற்ற சம்பவங்களில் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என வேதனை தெரிவித்தார்.

மதுவிற்பனை மூலமே இது போன்ற குற்றங்கள் அதிகரிப்பதாகவும், ஒரு குற்ற வழக்குகளில் குற்றம் செய்தவர்களுக்கும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும், தூண்டியவர்களுக்கும் தண்டனை உள்ளது. எனவே மது விற்பனை செய்யும் அரசே ஏன் குற்றத்தை தூண்டியதாக கருதக் கூடாது என தெரிவித்தார்.

மேலும், மது போதையில் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது என தெரிவித்த நீதிபதி, மதுவின் மூலமாக குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாவும் எனவே மதுவை விற்கும் தமிழக அரசை இந்த குற்ற சம்பவங்களுக்கு பொறுப்பாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய சமுதாய சீரழிவுக்கு காரணமாக உள்ள விசயத்தில் அரசு கை கழுவுவதை நீதிமன்றம் அனுமதிக்காது என தெரிவித்தார்.

இந்த குற்ற சம்பவங்களில் மாநில அரசை குற்றத்திற்கு உடந்தையாக சேர்த்து தண்டனை விதிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர முடியும் எனவும் அரசுக்கு அபராதமும் விதிக்க முடியும் எனவும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த உத்தரவு நகலை அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் அனுப்ப வேண்டும் எனவும் இதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காண முடியும் என தெரிவித்த நீதிபதி, மதுவின் மூலம் ஏற்படும் குற்றச் சம்பவங்களுக்கு ஏன் தமிழக அரசை பொறுப்பாக்கக் கூடாது என்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment