இன்றைய செய்திகள் Live : வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் திட்டமிட்டபடி நடைபெறும்

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil Nadu News Today Live Updates

Tamil nadu news today updates : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ‘குரூப் – 4’ தேர்வு முறைகேடு தொடர்பாக, இடைத்தரகராக இருந்து தேர்வெழுதியவர் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2017 ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. முறைகேடு தெரியவந்தாலும் அனைவரும் தற்போது அரசு பணிகளில் உள்ளனர். எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.என்.பி.எஸ்.சி., அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

‘மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, ‘நீட்’ நுழைவுத் தேர்வு கட்டாயமே. இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து பின்வாங்கும் பேச்சே இல்லை’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து, தமிழக அரசு சார்பிலும் உச்ச நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Live Blog

Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

09:33 (IST)28 Jan 2020
வங்கி ஸ்டிரைக் திட்டமிட்டபடி நடைபெறும்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக, மத்திய தொழிலாளர் நல ஆணையர் ராஜன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil nadu news today updates : குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அ.தி.மு.க., அரசை பாராட்ட தயார்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் புதிதாக 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

Web Title:

Tamil nadu news today live updates bank strike corona virus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close